< சங்கீதம் 113 >

1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
هللویاه! ای بندگان خداوند، تسبیح بخوانید. نام خداوند را تسبیح بخوانید.۱
2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
نام خداوند متبارک باد، از الان تاابدالاباد.۲
3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
از مطلع آفتاب تا مغرب آن، نام خداوند را تسبیح خوانده شود.۳
4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
خداوند برجمیع امتها متعال است و جلال وی فوق آسمانها.۴
5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
کیست مانند یهوه خدای ما که بر اعلی علیین نشسته است؟۵
6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
و متواضع می‌شود تا نظرنماید بر آسمانها و بر زمین.۶
7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
که مسکین را ازخاک برمی دارد و فقیر را از مزبله برمی افرازد.۷
8 அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
تااو را با بزرگان بنشاند یعنی با بزرگان قوم خویش.۸
9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
زن نازاد را خانه نشین می‌سازد و مادر فرحناک فرزندان. هللویاه!۹

< சங்கீதம் 113 >