< சங்கீதம் 113 >
1 ௧ அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
할렐루야, 여호와의 종들아 찬양하라 여호와의 이름을 찬양하라
2 ௨ இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
이제부터 영원까지 여호와의 이름을 찬송할지로다
3 ௩ சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
해 돋는 데서부터 해 지는 데까지 여호와의 이름이 찬양을 받으시리로다
4 ௪ யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
여호와는 모든 나라 위에 높으시며 그 영광은 하늘 위에 높으시도다
5 ௫ உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
여호와 우리 하나님과 같은 자 누구리요 높은 위에 앉으셨으나
6 ௬ அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
스스로 낮추사 천지를 살피시고
7 ௭ அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
가난한 자를 진토에서 일으키시며 궁핍한 자를 거름 무더기에서 드셔서
8 ௮ அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
방백들 곧 그 백성의 방백들과 함께 세우시며
9 ௯ மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
또 잉태하지 못하던 여자로 집에 거하게 하사 자녀의 즐거운 어미가 되게 하시는도다 할렐루야