< சங்கீதம் 112 >
1 ௧ அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
Övgüler sunun RAB'be! Ne mutlu RAB'den korkan insana, O'nun buyruklarından büyük zevk alana!
2 ௨ அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
Soyu yeryüzünde güç kazanacak, Doğruların kuşağı kutsanacak.
3 ௩ செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
Bolluk ve zenginlik eksilmez evinden, Sonsuza dek sürer doğruluğu.
4 ௪ செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
Karanlıkta ışık doğar dürüstler için, Lütfeden, sevecen, doğru insanlar için.
5 ௫ இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
Ne mutlu eli açık olan, ödünç veren, İşlerini adaletle yürüten insana!
6 ௬ அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
Asla sarsılmaz, Sonsuza dek anılır doğru insan.
7 ௭ துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
Kötü haberden korkmaz, Yüreği sarsılmaz, RAB'be güvenir.
8 ௮ அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
Gözü pektir, korku nedir bilmez, Sonunda düşmanlarının yenilgisini görür.
9 ௯ வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
Armağanlar dağıttı, yoksullara verdi; Doğruluğu sonsuza dek kalıcıdır, Gücü ve saygınlığı artar.
10 ௧0 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
Kötü kişi bunu görünce kudurur, Dişlerini gıcırdatır, kendi kendini yer, bitirir. Kötülerin dileği boşa çıkar.