< சங்கீதம் 112 >

1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
Beato l'uomo che teme il Signore e trova grande gioia nei suoi comandamenti. Alleluia.
2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
Potente sulla terra sarà la sua stirpe, la discendenza dei giusti sarà benedetta.
3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
Onore e ricchezza nella sua casa, la sua giustizia rimane per sempre.
4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
Spunta nelle tenebre come luce per i giusti, buono, misericordioso e giusto.
5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
Felice l'uomo pietoso che dà in prestito, amministra i suoi beni con giustizia.
6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
Egli non vacillerà in eterno: Il giusto sarà sempre ricordato.
7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
Non temerà annunzio di sventura, saldo è il suo cuore, confida nel Signore.
8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
Sicuro è il suo cuore, non teme, finché trionferà dei suoi nemici.
9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
Egli dona largamente ai poveri, la sua giustizia rimane per sempre, la sua potenza s'innalza nella gloria.
10 ௧0 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
L'empio vede e si adira, digrigna i denti e si consuma. Ma il desiderio degli empi fallisce.

< சங்கீதம் 112 >