< சங்கீதம் 111 >
1 ௧ அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
Praise the Lord! I will thank the Lord with all my heart in the congregation of the faithful.
2 ௨ யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.
All the wonderful things the Lord has done are studied by everyone who loves them.
3 ௩ அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
His majesty and honor are revealed by what he does; his goodness lasts forever.
4 ௪ அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
He wants the wonderful things he has done to be remembered; the Lord is gracious and kind.
5 ௫ தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
He feeds those who respect him; he always remembers the agreement he made.
6 ௬ தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
He demonstrated to his people the powerful things he could do by giving them the lands of other nations.
7 ௭ அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
Everything he does can be depended on, and is right; all his commandments are trustworthy.
8 ௮ அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.
They remain rock-solid forever. He was true and right in saying what should be done.
9 ௯ அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
He delivered his people. He commanded that his agreement would continue forever. How holy and awesome is his reputation!
10 ௧0 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
The beginning of wisdom is honoring the Lord. Those who follow what he says do well. He is to be praised forever!