< சங்கீதம் 110 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவா என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
大衛的詩。 耶和華對我主說: 你坐在我的右邊, 等我使你仇敵作你的腳凳。
2 ௨ யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
耶和華必使你從錫安伸出能力的杖來; 你要在你仇敵中掌權。
3 ௩ உமது மகத்துவத்தின் நாளிலே உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.
當你掌權的日子, 你的民要以聖潔的妝飾為衣, 甘心犧牲自己; 你的民多如清晨的甘露。
4 ௪ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
耶和華起了誓,決不後悔,說: 你是照着麥基洗德的等次永遠為祭司。
5 ௫ உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
在你右邊的主, 當他發怒的日子,必打傷列王。
6 ௬ அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
他要在列邦中刑罰惡人, 屍首就遍滿各處; 他要在許多國中打破仇敵的頭。
7 ௭ வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.
他要喝路旁的河水, 因此必抬起頭來。