< சங்கீதம் 11 >

1 இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
برای سالار مغنیان. مزمور داود بر خداوند توکل می‌دارم. چرا به‌جانم می گویید: «مثل مرغ به کوه خودبگریزید.۱
2 இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
زیرا اینک شریران کمان را می‌کشند وتیر را به زه نهاده‌اند، تا بر راست دلان در تاریکی بیندازند.۲
3 அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, நீதிமான் என்ன செய்வான்?
زیرا که ارکان منهدم می‌شوند و مردعادل چه کند؟»۳
4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
خداوند در هیکل قدس خود است و کرسی خداوند در آسمان. چشمان او می‌نگرد، پلکهای وی بنی آدم را می‌آزماید.۴
5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
خداوند مرد عادل راامتحان می‌کند؛ و اما از شریر و ظلم دوست، جان او نفرت می‌دارد.۵
6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; நெருப்பும், கந்தகமும், அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
بر شریر دامها و آتش وکبریت خواهد بارانید، و باد سموم حصه پیاله ایشان خواهد بود.۶
7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
زیرا خداوند عادل است وعدالت را دوست می‌دارد، و راستان روی او راخواهند دید.۷

< சங்கீதம் 11 >