< சங்கீதம் 11 >
1 ௧ இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
За първия певец. Давидов псалом. На Господа уповавам; Как думате на душата ми: Бягай в гората ваша като птица?
2 ௨ இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
Понеже, ето, нечестивите запъват лъка, Приготвят стрелите си на тетивите За да устрелят в тъмно ония, които са с право сърце.
3 ௩ அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, நீதிமான் என்ன செய்வான்?
Защото основанията се разориха; А праведният що е извършил?
4 ௪ யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
Господ е в светия Си храм, Чиито престол е на небето; Очите му гледат, клепачите Му изпитват човешките чада.
5 ௫ யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
Господ изпитва праведния; А душата Му мрази нечестивия и онзи, който обича насилие.
6 ௬ துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; நெருப்பும், கந்தகமும், அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
Над нечестивите ще направи примки; Огън и сяра и горещ вятър ще бъдат съдържанието на чашата им.
7 ௭ யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
Защото праведният Бог обича правдата; Праведният човек ще гледа лицето Му.