< சங்கீதம் 109 >
1 ௧ இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
ऐ ख़ुदा मेरे महमूद ख़ामोश न रह!
2 ௨ துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
क्यूँकि शरीरों और दग़ाबाज़ों ने मेरे ख़िलाफ़ मुँह खोला है, उन्होंने झूठी ज़बान से मुझ से बातें की हैं।
3 ௩ பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.
उन्होंने 'अदावत की बातों से मुझे घेर लिया, और बे वजह मुझ से लड़े हैं।
4 ௪ என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.
वह मेरी मुहब्बत की वजह से मेरे मुख़ालिफ़ हैं, लेकिन मैं तो बस दुआ करता हूँ।
5 ௫ நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
उन्होंने नेकी के बदले मुझ से बदी की है, और मेरी मुहब्बत के बदले' अदावत।
6 ௬ அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.
तू किसी शरीर आदमी को उस पर मुक़र्रर कर दे और कोई मुख़ालिफ़ उनके दहने हाथ खड़ा रहे
7 ௭ அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
जब उसकी 'अदालत हो तो वह मुजरिम ठहरे, और उसकी दुआ भी गुनाह गिनी जाए!
8 ௮ அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
उसकी उम्र कोताह हो जाए, और उसका मन्सब कोई दूसरा ले ले!
9 ௯ அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
उसके बच्चे यतीम हो जाएँ, और उसकी बीवी बेवा हो जाए!
10 ௧0 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
उसके बच्चे आवारा होकर भीक माँगे; उनको अपने वीरान मकामों से दूर जाकर टुकड़े माँगना पड़ें!
11 ௧௧ கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
क़र्ज़ के तलबगार उसका सब कुछ छीन ले, और परदेसी उसकी कमाई लूट लें।
12 ௧௨ அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.
कोई न हो जो उस पर शफ़क़त करे, न कोई उसके यतीम बच्चों पर तरस खाए!
13 ௧௩ அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.
उसकी नसल कट जाए, और दूसरी नसल में उनका नाम मिटा दिया जाए!
14 ௧௪ அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.
उसके बाप — दादा की बदी ख़ुदावन्द के सामने याद रहे, और उसकी माँ का गुनाह मिटाया न जाए!
15 ௧௫ அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
वह बराबर ख़ुदावन्द के सामने रहें, ताकि वह ज़मीन पर से उनका ज़िक्र मिटा दे!
16 ௧௬ அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
इसलिए कि उसने रहम करना याद नरख्खा, लेकिन ग़रीब और मुहताज और शिकस्तादिल को सताया, ताकि उनको मार डाले।
17 ௧௭ சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
बल्कि ला'नत करना उसे पसंद था, इसलिए वही उस पर आ पड़ी; और दुआ देना उसे पसन्द न था, इसलिए वह उससे दूर रही
18 ௧௮ சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
उसने ला'नत को अपनी पोशाक की तरह पहना, और वह पानी की तरह उसके बातिन में, और तेल की तरह उसकी हड़िडयों में समा गई।
19 ௧௯ அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
वह उसके लिए उस पोशाक की तरह हो जिसे वह पहनता है, और उस पटके की जगह, जिससे वह अपनी कमर कसे रहता है।
20 ௨0 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.
ख़ुदावन्द की तरफ़ से मेरे मुख़ालिफ़ों का, और मेरी जान को बुरा कहने वालों का यही बदला है!
21 ௨௧ ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
लेकिन ऐ मालिक ख़ुदावन्द, अपने नाम की ख़ातिर मुझ पर एहसान कर; मुझे छुड़ा क्यूँकि तेरी शफ़क़त खू़ब है!
22 ௨௨ நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.
इसलिए कि मैं ग़रीब और मुहताज हूँ, और मेरा दिल मेरे पहलू में ज़ख़्मी है।
23 ௨௩ சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
मैं ढलते साये की तरह जाता रहा; मैंटिड्डी की तरह उड़ा दिया गया।
24 ௨௪ உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
फ़ाक़ा करते करते मेरे घुटने कमज़ोर हो गए, और चिकनाई की कमी से मेरा जिस्म सूख गया।
25 ௨௫ நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.
मैं उनकी मलामत का निशाना बन गया हूँ जब वह मुझे देखते हैं तो सिर हिलाते हैं।
26 ௨௬ என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
ऐ ख़ुदावन्द मेरे ख़ुदा, मेरी मदद कर! अपनी शफ़क़त के मुताबिक़ मुझे बचा ले।
27 ௨௭ இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
ताकि वह जान लें कि इसमें तेरा हाथ है, और तू ही ने ऐ ख़ुदावन्द, यह किया है!
28 ௨௮ அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
वह ला'नत करते रहें, लेकिन तू बरकत दे! वह जब उठेगे तो शर्मिन्दा होंगे, लेकिन तेरा बन्दा ख़ुश होगा!
29 ௨௯ என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
मेरे मुख़ालिफ़ ज़िल्लत से मुलब्बस हो जाएँ और अपनी ही शर्मिन्दगी की चादर की तरह ओढ़ लें।
30 ௩0 யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
मैं अपने मुँह से ख़ुदावन्द का बड़ा शुक्र करूँगा, बल्कि बड़ी भीड़ में उसकी हम्द करूँगा।
31 ௩௧ தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.
क्यूँकि वह मोहताज के दहने हाथ खड़ा होगा, ताकि उसकी जान पर फ़तवा देने वालों से उसे रिहाई दे।