< சங்கீதம் 108 >

1 தாவீது பாடிய பாடல். தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
Canción: Salmo de David. MI corazón está dispuesto, oh Dios; cantaré y salmearé todavía en mi gloria.
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
Despiértate, salterio y arpa: despertaré al alba.
3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Te alabaré, oh Jehová, entre los pueblos; á ti cantaré salmos entre las naciones.
4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
Porque grande más que los cielos es tu misericordia, y hasta los cielos tu verdad.
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Ensálzate, oh Dios, sobre los cielos; y sobre toda la tierra tu gloria.
6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
Para que sean librados tus amados, salva con tu diestra y respóndeme.
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
Dios habló por su santuario: alegraréme, repartiré á Sichêm, y mediré el valle de Succoth.
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
Mío es Galaad, mío es Manasés; y Ephraim es la fortaleza de mi cabeza; Judá es mi legislador;
9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
Moab, la vasija de mi lavatorio: sobre Edom echaré mi calzado; regocijaréme sobre Palestina.
10 ௧0 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
¿Quién me guiará á la ciudad fortalecida? ¿quién me guiará hasta Idumea?
11 ௧௧ எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
Ciertamente tú, oh Dios, que nos habías desechado; y no salías, oh Dios, con nuestros ejércitos.
12 ௧௨ இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
Danos socorro en la angustia: porque mentirosa es la salud del hombre.
13 ௧௩ தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
En Dios haremos proezas: y él hollará nuestros enemigos.

< சங்கீதம் 108 >