< சங்கீதம் 108 >
1 ௧ தாவீது பாடிய பாடல். தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
Песнь, псалом Давиду. Готово сердце мое, Боже, готово сердце мое: воспою и пою во славе моей.
2 ௨ வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
Востани, слава моя, востани, псалтирю и гусли: востану рано.
3 ௩ யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Исповемся Тебе в людех, Господи, пою Тебе во языцех:
4 ௪ உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
яко велия верху небес милость Твоя и до облак истина Твоя.
5 ௫ தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Вознесися на небеса, Боже, и по всей земли слава Твоя,
6 ௬ உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
яко да избавятся возлюбленнии Твои: спаси десницею Твоею и услыши мя.
7 ௭ தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
Бог возглагола во святем Своем: вознесуся и разделю Сикиму, и удоль Селений размерю.
8 ௮ கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
Мой есть Галаад, и Мой есть Манассий, и Ефрем заступление главы Моея: Иуда царь Мой,
9 ௯ மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
Моав коноб упования Моего: на Идумею наложу сапог Мой: мне иноплеменницы покоришася.
10 ௧0 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
Кто введет мя во град ограждения? Или кто наставит мя до Идумеи?
11 ௧௧ எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
Не Ты ли, Боже, отринувый нас, и не изыдеши, Боже, в силах наших?
12 ௧௨ இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
Даждь нам помощь от скорби: и суетно спасение человеческо.
13 ௧௩ தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
О Бозе сотворим силу, и Той уничижит враги нашя.