< சங்கீதம் 106 >
1 ௧ அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Исповедайтеся Господеви, яко благ, яко в век милость Его.
2 ௨ யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?
Кто возглаголет силы Господни, слышаны сотворит вся хвалы Его?
3 ௩ நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
Блажени хранящии суд и творящии правду во всякое время.
4 ௪ யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,
Помяни нас, Господи, во благоволении людий Твоих, посети нас спасением Твоим,
5 ௫ உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
видети во благости избранныя Твоя, возвеселитися в веселии языка Твоего, хвалитися с достоянием Твоим.
6 ௬ எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம்.
Согрешихом со отцы нашими, беззаконновахом, неправдовахом:
7 ௭ எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய், சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள்.
отцы наши во Египте не разумеша чудес Твоих, ни помянуша множества милости Твоея: и преогорчиша восходяще в Чермное море.
8 ௮ ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார்.
И спасе их имене Своего ради, сказати силу Свою:
9 ௯ அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது; காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.
и запрети Чермному морю, и изсяче: и настави я в бездне яко в пустыни.
10 ௧0 பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
И спасе я из руки ненавидящих и избави я из руки врагов.
11 ௧௧ அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
Покры вода стужающыя им: ни един от них избысть.
12 ௧௨ அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
И вероваша словеси Его и воспеша хвалу Его.
13 ௧௩ ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,
Ускориша, забыша дела Его, не стерпеша совета Его:
14 ௧௪ வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
и похотеша желанию в пустыни и искусиша Бога в безводней.
15 ௧௫ அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
И даде им прошение их, посла сытость в душы их.
16 ௧௬ முகாமில் அவர்கள் மோசேயின்மேலும், யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
И прогневаша Моисеа в стану, Аарона святаго Господня.
17 ௧௭ பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
Отверзеся земля и пожре Дафана и покры на сонмищи Авирона:
18 ௧௮ அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
и разжжеся огнь в сонме их, пламень попали грешники.
19 ௧௯ அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.
И сотвориша телца в Хориве и поклонишася истуканному:
20 ௨0 தங்களுடைய மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
и измениша славу Его в подобие телца ядущаго траву.
21 ௨௧ எகிப்திலே பெரிய செயல்களையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
И забыша Бога спасающаго их, сотворшаго велия во Египте,
22 ௨௨ தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
чудеса в земли Хамове, страшная в мори Чермнем.
23 ௨௩ ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடி, அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான்.
И рече потребити их, аще не бы Моисей избранный Его стал в сокрушении пред Ним, возвратити ярость Его, да не погубит их.
24 ௨௪ அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல், விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள்.
И уничижиша землю желанную, не яша веры словеси Его:
25 ௨௫ யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
и поропташа в селениих своих, не услышаша гласа Господня.
26 ௨௬ அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
И воздвиже руку Свою на ня, низложити я в пустыни,
27 ௨௭ அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
и низложити семя их во языцех, и расточити я в страны.
28 ௨௮ அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு,
И причастишася Веельфегору и снедоша жертвы мертвых:
29 ௨௯ தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
и раздражиша Его в начинаниих своих, и умножися в них падение.
30 ௩0 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
И ста Финеес и умилостиви, и преста сечь:
31 ௩௧ அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
и вменися ему в правду, в род и род до века.
32 ௩௨ மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
И прогневаша Его на воде Пререкания, и озлоблен бысть Моисей их ради:
33 ௩௩ அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
яко преогорчиша дух его и разнствова устнама своима.
34 ௩௪ யெகோவா தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை.
Не потребиша языки, яже рече Господь им.
35 ௩௫ அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;
И смесишася во языцех и навыкоша делом их:
36 ௩௬ அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.
и поработаша истуканным их, и бысть им в соблазн.
37 ௩௭ அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
И пожроша сыны своя и дщери своя бесовом,
38 ௩௮ அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு, தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
и пролияша кровь неповинную, кровь сынов своих и дщерей, яже пожроша истуканным Ханаанским: и убиена бысть земля их кровьми
39 ௩௯ அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி, தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள்.
и осквернися в делех их: и соблудиша в начинаниих своих.
40 ௪0 அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
И разгневася яростию Господь на люди Своя и омерзи достояние Свое:
41 ௪௧ அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள்.
и предаде я в руки врагов, и обладаша ими ненавидящии их.
42 ௪௨ அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
И стужиша им врази их: и смиришася под руками их.
43 ௪௩ அநேகமுறை அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
Множицею избави я: тии же преогорчиша Его советом своим, и смиришася в беззакониих своих.
44 ௪௪ அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து,
И виде Господь, внегда скорбети им, внегда услышаше моление их:
45 ௪௫ அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,
и помяну завет Свой, и раскаяся по множеству милости Своея:
46 ௪௬ அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
и даде я в щедроты пред всеми пленившими я.
47 ௪௭ எங்கள் தேவனாகிய யெகோவாவே, நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி, எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
Спаси ны, Господи, Боже наш, и собери ны от язык, исповедатися имени Твоему святому, хвалитися во хвале Твоей.
48 ௪௮ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக, அல்லேலூயா.
Благословен Господь Бог Израилев от века и до века. И рекут вси людие: буди, буди.