< சங்கீதம் 101 >
1 ௧ தாவீதின் பாடல். இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.
Davut'un mezmuru Sevgini ve adaletini ezgilerle anacağım, Seni ilahilerle öveceğim, ya RAB.
2 ௨ உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
Dürüst davranmaya özen göstereceğim, Ne zaman geleceksin bana? Temiz bir yaşam süreceğim evimde,
3 ௩ தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
Önümde alçaklığa izin vermeyeceğim. Tiksinirim döneklerin işinden, Etkilemez beni.
4 ௪ மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.
Uzak olsun benden sapıklık, Tanımak istemem kötülüğü.
5 ௫ பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
Yok ederim dostunu gizlice çekiştireni, Katlanamam tepeden bakan, gururlu insana.
6 ௬ தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.
Gözüm ülkenin sadık insanları üzerinde olacak, Yanımda oturmalarını isterim; Bana dürüst yaşayan kişi hizmet edecek.
7 ௭ கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
Hilekâr evimde oturmayacak, Yalan söyleyen gözümün önünde durmayacak.
8 ௮ அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.
Her sabah ülkedeki kötüleri yok ederek Bütün haksızları RAB'bin kentinden söküp atacağım.