< சங்கீதம் 101 >

1 தாவீதின் பாடல். இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.
Af David. En Salme. Om Naade og Ret vil jeg synge, dig vil jeg lovsynge, Herre.
2 உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
Jeg vil agte paa uskyldiges Vej, naar den viser sig for mig, vandre i Hjertets Uskyld bag Hjemmets Vægge,
3 தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
paa Niddingsdaad lader jeg aldrig mit Øje hvile. Jeg hader den, der gør ondt, han er ej i mit Følge;
4 மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.
det falske Hjerte maa holde sig fra mig, den onde kender jeg ikke;
5 பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
den, der sværter sin Næste, udrydder jeg; den opblæste og den hovmodige taaler jeg ikke.
6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.
Til Landets trofaste søger mit Øje, hos mig skal de bo; den, der vandrer uskyldiges Vej, skal være min Tjener;
7 கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
ingen, der øver Svig, skal bo i mit Hus, ingen, som farer med Løgn, bestaa for mit Øje.
8 அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.
Alle Landets gudløse gør jeg til intet hver Morgen for at udrydde alle Udaadsmænd af HERRENS By.

< சங்கீதம் 101 >