< சங்கீதம் 100 >
1 ௧ நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
(감사의 시) 온 땅이여, 여호와께 즐거이 부를지어다
2 ௨ மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
기쁨으로 여호와를 섬기며 노래하면서 그 앞에 나아갈지어다
3 ௩ யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
여호와가 우리 하나님이신 줄 너희는 알지어다! 그는 우리를 지으신 자시요 우리는 그의 것이니 그의 백성이요 그의 기르시는 양이로다
4 ௪ அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
감사함으로 그 문에 들어가며 찬송함으로 그 궁정에 들어가서 그에게 감사하며 그 이름을 송축할지어다
5 ௫ யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
대저 여호와는 선하시니 그 인자하심이 영원하고 그 성실하심이 대대에 미치리로다