< சங்கீதம் 100 >

1 நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
מזמור לתודה הריעו ליהוה כל-הארץ
2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
עבדו את-יהוה בשמחה באו לפניו ברננה
3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
דעו-- כי יהוה הוא אלהים הוא-עשנו ולא (ולו) אנחנו-- עמו וצאן מרעיתו
4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
באו שעריו בתודה--חצרתיו בתהלה הודו-לו ברכו שמו
5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
כי-טוב יהוה לעולם חסדו ועד-דר ודר אמונתו

< சங்கீதம் 100 >