< சங்கீதம் 1 >
1 ௧ துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
Блажен муж, который не ходит на совет нечестивых и не стоит на пути грешных и не сидит в собрании развратителей,
2 ௨ யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
но в законе Господа воля его, и о законе Его размышляет он день и ночь!
3 ௩ அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
И будет он как дерево, посаженное при потоках вод, которое приносит плод свой во время свое, и лист которого не вянет; и во всем, что он ни делает, успеет.
4 ௪ துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
Не так - нечестивые; но они - как прах, возметаемый ветром.
5 ௫ ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
Потому не устоят нечестивые на суде, и грешники - в собрании праведных.
6 ௬ யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
Ибо знает Господь путь праведных, а путь нечестивых погибнет.