< நீதிமொழிகள் 9 >

1 ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
智慧建造了房舍,雕琢了七根石柱,
2 தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
宰殺了牲畜,配製了美酒,舖設了飯桌,
3 தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
派出自己的使女,在城市高處吶喊:「
4 புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
誰是無知的,請轉身到這裏來! 」她對愚鈍的人說:「
5 நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
你們來,吃我的食糧,飲我配製的酒!
6 பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
你們應放棄無知,好使你們得以生存,並在明智的道路上邁進。」
7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
誰矯正輕狂的人,只有自招羞辱;誰責斥邪惡的人,只有自找凌辱。
8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
你不要責斥輕狂的人,免得他恨你;卻要責斥明智的人,他必會愛你。
9 ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
你若指教明智的人,他必更明智;你若教訓正義的人,他必更有見識。
10 ௧0 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
敬畏上主是智慧的肇基;認識至聖者就是睿智。
11 ௧௧ என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
藉著我,你的歲月纔可增多,你的壽命纔可延長。
12 ௧௨ நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
你若有智慧,你必蒙受其惠;你若是輕狂也只有自食其果。
13 ௧௩ மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
愚昧太太,浮燥愚蠢,一無所知。
14 ௧௪ அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
她坐在自家門前,坐在城內高處的座位上,
15 ௧௫ தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
向一往直前的路人喊說:「
16 ௧௬ எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
誰是無知的,請轉身到這裏來! 」她向愚鈍的人說:
17 ௧௭ மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
「偷來的水,更香甜;背地吃的餅更有味。」
18 ௧௮ இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
他卻不知冥域正在那裏,她的客人都在陰府的深處。 (Sheol h7585)

< நீதிமொழிகள் 9 >