< நீதிமொழிகள் 7 >
1 ௧ என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
१माझ्या मुला, माझे शब्द जपून ठेव, आणि माझ्या आज्ञा आपल्याजवळ साठवून ठेव.
2 ௨ என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
२माझ्या आज्ञा पाळ आणि जिवंत रहा, आणि माझे शिक्षण डोळ्यातील बाहुलीप्रमाणे जप.
3 ௩ அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
३ती आपल्या बोटांस बांध; ती आपल्या हृदयाच्या पाटीवर लिहून ठेव.
4 ௪ ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
४“तू माझी बहीण आहेस” असे ज्ञानाला म्हण, आणि सुज्ञतेला आपले नातेवाईक म्हण,
5 ௫ ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
५अशासाठी की, भुरळ घालणाऱ्या स्त्रीपासून, ते तुला व्यभिचारी स्त्रीच्या गोड शब्दांपासून वाचवतील.
6 ௬ நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது,
६माझ्या घराच्या खिडकीजवळील जाळ्यातून मी बाहेर पाहिले;
7 ௭ பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
७आणि मी पुष्कळ भोळे तरुण पाहिले. मला तरुणांमध्ये एक तरुण दिसला, जो बुद्धिहीन मनुष्य होता.
8 ௮ அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், இரவின் இருளிலும்.
८तो तरुण मनुष्य तिच्या कोपऱ्याजवळून जाणाऱ्या वाटेने जात होता, आणि तो तिच्या घराकडे,
9 ௯ அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
९त्या दिवशी संध्याकाळी संधीप्रकाशात, रात्रीच्यावेळी आणि अंधकारात गेला.
10 ௧0 அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
१०आणि तेथे ती स्त्री त्यास भेटली, वेश्येसारखा पोशाख केलेली आणि ती तेथे कशासाठी आहे हे तिला माहित होते.
11 ௧௧ அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
११ती वाचाळ व स्वच्छंदी असून, तिचे पाय घरी राहत नाही;
12 ௧௨ சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
१२कधी रस्त्यात, कधी बाजारात, प्रत्येक नाक्याजवळ ती थांबून राहते.
13 ௧௩ அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
१३मग तिने त्यास धरले आणि त्याची चुंबने घेतली; निर्लज्जपणे ती त्यास म्हणाली,
14 ௧௪ சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
१४“आज मी माझी शांत्यर्पणे केली; मी आपले नवस फेडले,
15 ௧௫ ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
१५ह्यासाठी मी तुला भेटायला, तुझे मुख पाहायला उत्सुकतेने बाहेर आले आणि तू मला सापडला आहेस.
16 ௧௬ என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
१६मी आपल्या अंथरुणावर, मिसरातली रंगीत सुती चादर पसरली आहे.
17 ௧௭ என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
१७मी आपले अंथरुण बोळ, अगरू, दालचिनी यांनी सुवासिक केली आहे.
18 ௧௮ வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
१८ये, आपण सकाळपर्यंत प्रीतीने भरून तृप्त होऊ; आपण वेगवेगळ्या कृतींनी प्रेम करून महान आनंद घेऊ.
19 ௧௯ கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
१९माझा पती घरी नाही; तो लांबच्या प्रवासास गेला आहे.
20 ௨0 பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
२०त्याने प्रवासासाठी पैश्याची पिशवीबरोबर घेतली आहे; तो पौर्णिमेच्या दिवशी परत घरी येईल.”
21 ௨௧ தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
२१तिने आपल्या मोहक बोलण्याने त्याचे मन वळवले; आणि आपल्या गोड बोलण्याने तिने त्यास सक्ती केली.
22 ௨௨ உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
२२तो तिच्यामागे चालला, जसा बैल कापला जाण्यास जातो, किंवा जसा हरीण सापळ्यात पकडला जातो,
23 ௨௩ ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
२३जसा पक्षी, पाशाकडे धाव घेतो, तसा हे आपल्या जीवाची किंमत घेण्यासाठी आहे हे तो जाणत नाही, किंवा तिर त्याचे काळीज भेदून जाईपर्यंत तसा तो तिच्यामागे जातो.
24 ௨௪ ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
२४आणि आता, माझ्या मुलांनो, माझे ऐका; मी काय सांगतो त्याकडे लक्ष द्या.
25 ௨௫ உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.
२५तुझ्या मनाला तिच्या मार्गाकडे वळू देऊ नकोस; तिच्या वाटांनी जाऊन बहकू नकोस.
26 ௨௬ அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
२६कारण तिने पुष्कळांना घायाळ करून पाडले आहे, त्यांची संख्या मोजू शकत नाही.
27 ௨௭ அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும். (Sheol )
२७तिचे घर म्हणजे अधोलोकाकडचा मार्ग आहे; तो मृत्यूच्या खोल्यांकडे खाली उतरून जातो. (Sheol )