< நீதிமொழிகள் 6 >
1 ௧ என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, அந்நியனுக்கு உறுதியளித்தால்,
Figlio mio, se hai garantito per il tuo prossimo, se hai dato la tua mano per un estraneo,
2 ௨ நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
se ti sei legato con le parole delle tue labbra e ti sei lasciato prendere dalle parole della tua bocca,
3 ௩ இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
figlio mio, fà così per liberartene: poiché sei caduto nelle mani del tuo prossimo, và, gèttati ai suoi piedi, importuna il tuo prossimo;
4 ௪ உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
non concedere sonno ai tuoi occhi né riposo alle tue palpebre,
5 ௫ வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
lìberatene come la gazzella dal laccio, come un uccello dalle mani del cacciatore.
6 ௬ சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Và dalla formica, o pigro, guarda le sue abitudini e diventa saggio.
7 ௭ அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும்,
Essa non ha né capo, né sorvegliante, né padrone,
8 ௮ கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
eppure d'estate si provvede il vitto, al tempo della mietitura accumula il cibo.
9 ௯ சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
Fino a quando, pigro, te ne starai a dormire? Quando ti scuoterai dal sonno?
10 ௧0 இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
Un pò dormire, un pò sonnecchiare, un pò incrociare le braccia per riposare
11 ௧௧ உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
e intanto giunge a te la miseria, come un vagabondo, e l'indigenza, come un mendicante.
12 ௧௨ வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
Il perverso, uomo iniquo, va con la bocca distorta,
13 ௧௩ அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
ammicca con gli occhi, stropiccia i piedi e fa cenni con le dita.
14 ௧௪ அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, வழக்குகளை உண்டாக்குகிறான்.
Cova propositi malvagi nel cuore, in ogni tempo suscita liti.
15 ௧௫ ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
Per questo improvvisa verrà la sua rovina, in un attimo crollerà senza rimedio.
16 ௧௬ ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
Sei cose odia il Signore, anzi sette gli sono in abominio:
17 ௧௭ அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை,
occhi alteri, lingua bugiarda, mani che versano sangue innocente,
18 ௧௮ மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,
cuore che trama iniqui progetti, piedi che corrono rapidi verso il male,
19 ௧௯ பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
falso testimone che diffonde menzogne e chi provoca litigi tra fratelli.
20 ௨0 என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
Figlio mio, osserva il comando di tuo padre, non disprezzare l'insegnamento di tua madre.
21 ௨௧ அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
Fissali sempre nel tuo cuore, appendili al collo.
22 ௨௨ நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.
Quando cammini ti guideranno, quando riposi veglieranno su di te, quando ti desti ti parleranno;
23 ௨௩ கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.
poiché il comando è una lampada e l'insegnamento una luce e un sentiero di vita le correzioni della disciplina,
24 ௨௪ அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும்.
per preservarti dalla donna altrui, dalle lusinghe di una straniera.
25 ௨௫ உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
Non desiderare in cuor tuo la sua bellezza; non lasciarti adescare dai suoi sguardi,
26 ௨௬ விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
perché, se la prostituta cerca un pezzo di pane, la maritata mira a una vita preziosa.
27 ௨௭ தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா?
Si può portare il fuoco sul petto senza bruciarsi le vesti
28 ௨௮ தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
o camminare sulla brace senza scottarsi i piedi?
29 ௨௯ பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான்.
Così chi si accosta alla donna altrui, chi la tocca, non resterà impunito.
30 ௩0 திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;
Non si disapprova un ladro, se ruba per soddisfare l'appetito quando ha fame;
31 ௩௧ அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
eppure, se è preso, dovrà restituire sette volte, consegnare tutti i beni della sua casa.
32 ௩௨ பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
Ma l'adultero è privo di senno; solo chi vuole rovinare se stesso agisce così.
33 ௩௩ வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; அவனுடைய நிந்தை ஒழியாது.
Incontrerà percosse e disonore, la sua vergogna non sarà cancellata,
34 ௩௪ பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.
poiché la gelosia accende lo sdegno del marito, che non avrà pietà nel giorno della vendetta;
35 ௩௫ அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
non vorrà accettare alcun compenso, rifiuterà ogni dono, anche se grande.