< நீதிமொழிகள் 5 >

1 என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;
Sine moj, čuj moju mudrost, prigni uho mojoj razboritosti
2 அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
da sačuvaš oprez, da ti usne zadrže znanje.
3 ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
Jer s usana žene preljubnice kaplje med i nepce joj je glađe od ulja,
4 அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
ali je ona naposljetku gorka kao pelin, oštra kao dvosjekli mač.
5 அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
Njene noge silaze k smrti, a koraci vode u Podzemlje. (Sheol h7585)
6 நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
Ona ne pazi na put života, ne mari što su joj staze kolebljive.
7 ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
Zato me sada poslušaj, sine, i ne odstupaj od riječi mojih usta.
8 உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.
Neka je put tvoj daleko od nje i ne približuj se vratima njezine kuće,
9 சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.
da drugima ne bi dao svoju slavu i okrutnima svoje godine;
10 ௧0 அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
da se ne bi tuđinci nasitili tvoga dobra i da tvoja zaslužba ne ode u tuđu kuću;
11 ௧௧ முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
da ne ridaš na koncu kad ti nestane tijela i puti
12 ௧௨ ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!
i da ne kažeš: “Oh, kako sam mrzio pouku i kako mi je srce preziralo ukor!
13 ௧௩ என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
I ne slušah glasa svojih učitelja, niti priklonih uho onima što me poučavahu.
14 ௧௪ சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
I umalo ne zapadoh u svako zlo, usred zbora i zajednice!”
15 ௧௫ உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
Pij vodu iz svoje nakapnice i onu što teče iz tvoga studenca.
16 ௧௬ உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
Moraju li se tvoji izvori razlijevati i tvoji potoci teći ulicama?
17 ௧௭ அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
Nego neka oni budu samo tvoji, a ne i tuđinaca koji su uza te.
18 ௧௮ உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
Neka je blagoslovljen izvor tvoj i raduj se sa ženom svoje mladosti:
19 ௧௯ அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
neka ti je kao mila košuta i ljupka gazela, neka te grudi njene opajaju u svako doba, njezina ljubav zatravljuje bez prestanka!
20 ௨0 என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
TÓa zašto bi se, sine moj, zanosio preljubnicom i grlio tuđinki njedra?
21 ௨௧ மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
Jer pred Jahvinim su očima čovjekovi putovi i on motri sve njegove staze.
22 ௨௨ துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
Opakoga će uhvatiti njegova zloća i sapet će ga užad njegovih grijeha.
23 ௨௩ அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Umrijet će jer nema pouke, propast će zbog svoje goleme gluposti.

< நீதிமொழிகள் 5 >