< நீதிமொழிகள் 31 >
1 ௧ ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:
利慕伊勒王的言語,是他母親教訓他的真言。
2 ௨ என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
我的兒啊,我腹中生的兒啊, 我許願得的兒啊!我當怎樣教訓你呢?
3 ௩ பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.
不要將你的精力給婦女; 也不要有敗壞君王的行為。
4 ௪ திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
利慕伊勒啊,君王喝酒,君王喝酒不相宜; 王子說濃酒在那裏也不相宜;
5 ௫ மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
恐怕喝了就忘記律例, 顛倒一切困苦人的是非。
6 ௬ மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
可以把濃酒給將亡的人喝, 把清酒給苦心的人喝,
7 ௭ அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
讓他喝了,就忘記他的貧窮, 不再記念他的苦楚。
8 ௮ ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் உன்னுடைய வாயைத் திற.
你當為啞巴開口, 為一切孤獨的伸冤。
9 ௯ உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.
你當開口按公義判斷, 為困苦和窮乏的辨屈。
10 ௧0 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.
才德的婦人誰能得着呢? 她的價值遠勝過珍珠。
11 ௧௧ அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது.
她丈夫心裏倚靠她, 必不缺少利益;
12 ௧௨ அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்.
她一生使丈夫有益無損。
13 ௧௩ ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.
她尋找羊羢和麻, 甘心用手做工。
14 ௧௪ அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
她好像商船從遠方運糧來,
15 ௧௫ இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
未到黎明她就起來, 把食物分給家中的人, 將當做的工分派婢女。
16 ௧௬ ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
她想得田地就買來; 用手所得之利栽種葡萄園。
17 ௧௭ தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
她以能力束腰, 使膀臂有力。
18 ௧௮ தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.
她覺得所經營的有利; 她的燈終夜不滅。
19 ௧௯ தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
她手拿撚線竿, 手把紡線車。
20 ௨0 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.
她張手賙濟困苦人, 伸手幫補窮乏人。
21 ௨௧ தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
她不因下雪為家裏的人擔心, 因為全家都穿着朱紅衣服。
22 ௨௨ இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
她為自己製作繡花毯子; 她的衣服是細麻和紫色布做的。
23 ௨௩ அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான்.
她丈夫在城門口與本地的長老同坐, 為眾人所認識。
24 ௨௪ மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
她做細麻布衣裳出賣, 又將腰帶賣與商家。
25 ௨௫ அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
能力和威儀是她的衣服; 她想到日後的景況就喜笑。
26 ௨௬ தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.
她開口就發智慧; 她舌上有仁慈的法則。
27 ௨௭ அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.
她觀察家務, 並不吃閒飯。
28 ௨௮ அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:
她的兒女起來稱她有福; 她的丈夫也稱讚她,
29 ௨௯ அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.
說:才德的女子很多, 惟獨你超過一切。
30 ௩0 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
艷麗是虛假的,美容是虛浮的; 惟敬畏耶和華的婦女必得稱讚。
31 ௩௧ அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.
願她享受操作所得的; 願她的工作在城門口榮耀她。