< நீதிமொழிகள் 3 >
1 ௧ என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.
わが子よ、わたしの教を忘れず、わたしの戒めを心にとめよ。
2 ௨ அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.
そうすれば、これはあなたの日を長くし、命の年を延べ、あなたに平安を増し加える。
3 ௩ கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
いつくしみと、まこととを捨ててはならない、それをあなたの首に結び、心の碑にしるせ。
4 ௪ அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.
そうすれば、あなたは神と人との前に恵みと、誉とを得る。
5 ௫ உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
心をつくして主に信頼せよ、自分の知識にたよってはならない。
6 ௬ உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
すべての道で主を認めよ、そうすれば、主はあなたの道をまっすぐにされる。
7 ௭ நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
自分を見て賢いと思ってはならない、主を恐れて、悪を離れよ。
8 ௮ அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும்.
そうすれば、あなたの身を健やかにし、あなたの骨に元気を与える。
9 ௯ உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.
あなたの財産と、すべての産物の初なりをもって主をあがめよ。
10 ௧0 அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
そうすれば、あなたの倉は満ちて余り、あなたの酒ぶねは新しい酒であふれる。
11 ௧௧ என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
わが子よ、主の懲しめを軽んじてはならない、その戒めをきらってはならない。
12 ௧௨ தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.
主は、愛する者を、戒められるからである、あたかも父がその愛する子を戒めるように。
13 ௧௩ ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
知恵を求めて得る人、悟りを得る人はさいわいである。
14 ௧௪ அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.
知恵によって得るものは、銀によって得るものにまさり、その利益は精金よりも良いからである。
15 ௧௫ முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.
知恵は宝石よりも尊く、あなたの望む何物も、これと比べるに足りない。
16 ௧௬ அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
その右の手には長寿があり、左の手には富と、誉がある。
17 ௧௭ அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
その道は楽しい道であり、その道筋はみな平安である。
18 ௧௮ அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
知恵は、これを捕える者には命の木である、これをしっかり捕える人はさいわいである。
19 ௧௯ யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.
主は知恵をもって地の基をすえ、悟りをもって天を定められた。
20 ௨0 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
その知識によって海はわきいで、雲は露をそそぐ。
21 ௨௧ என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.
わが子よ、確かな知恵と、慎みとを守って、それをあなたの目から離してはならない。
22 ௨௨ அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.
それはあなたの魂の命となりあなたの首の飾りとなる。
23 ௨௩ அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது.
こうして、あなたは安らかに自分の道を行き、あなたの足はつまずくことがない。
24 ௨௪ நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
あなたは座しているとき、恐れることはなく、伏すとき、あなたの眠りはここちよい。
25 ௨௫ திடீரென வரும் திகிலும், துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.
あなたはにわかに起る恐怖を恐れることなく、悪しき者の滅びが来ても、それを恐れることはない。
26 ௨௬ யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
これは、主があなたの信頼する者であり、あなたの足を守って、わなに捕われさせられないからである。
27 ௨௭ நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.
あなたの手に善をなす力があるならば、これをなすべき人になすことをさし控えてはならない。
28 ௨௮ உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
あなたが物を持っている時、その隣り人に向かい、「去って、また来なさい。あす、それをあげよう」と言ってはならない。
29 ௨௯ பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.
あなたの隣り人がかたわらに安らかに住んでいる時、これに向かって、悪を計ってはならない。
30 ௩0 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே.
もし人があなたに悪を行ったのでなければ、ゆえなく、これと争ってはならない。
31 ௩௧ கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
暴虐な人を、うらやんではならない、そのすべての道を選んではならない。
32 ௩௨ மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.
よこしまな者は主に憎まれるからである、しかし、正しい者は主に信任される。
33 ௩௩ துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
主の、のろいは悪しき者の家にある、しかし、正しい人のすまいは主に恵まれる。
34 ௩௪ இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
彼はあざける者をあざけり、へりくだる者に恵みを与えられる。
35 ௩௫ ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
知恵ある者は、誉を得る、しかし、愚かな者ははずかしめを得る。