< நீதிமொழிகள் 24 >

1 பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
你不要妒忌作惡的人,不要希求與他們共處;
2 அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.
因為他們的心靈,只圖謀不軌;他們的嘴唇,只講論是非。
3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
因著智慧,家庭得以興建;因著明智,家庭得以穩定。
4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
各種珍奇可愛的寶物,因著智識可儲藏滿室。
5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான்.
智慧人勝於壯士,明智人強於勇士;
6 நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.
因為作戰須有智謀,勝利在於謀士眾多。
7 மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான்.
為愚昧的人,智慧太高妙;他在城門口,只好不開口。
8 தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.
籌劃作惡的人,可稱為陰險家。
9 தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.
愚人的計謀只是罪惡;狂妄的人為人所憎惡。
10 ௧0 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது.
你若萎靡不振,到災難的日子,必然氣竭力盡。
11 ௧௧ மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி.
被帶去受死的人,你應拯救他;行將被殺戮的人,你要挽救他。
12 ௧௨ அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ?
或許你要說:「看! 我全不知道! 」難道那權衡人心的能不明瞭﹖難道監察你心靈的能不知道﹖他必按每人的作為還報每人。
13 ௧௩ என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
我兒,你要吃蜜,因為蜜好;蜂房的蜜,香甜可口。
14 ௧௪ அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
對你的靈魂,智慧也是這樣:你找得了她,必有好前途;你所希望的,決不會落空。
15 ௧௫ துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
惡惡人對義人的家,不要圖謀不軌;對他的住所,不要加以破壞;
16 ௧௬ நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
因為義人雖七次跌倒,仍然要起來;但是惡人一失足,必陷禍患中。
17 ௧௭ உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
你的仇人跌倒,且不要高興;他若失足摔倒,且不要心喜;
18 ௧௮ யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
免得上主看見而不快,因而撤消對他的忿怒。
19 ௧௯ பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
對作惡的人,你不要動怒;對乖戾之徒,也不必嫉妒;
20 ௨0 துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
因為惡人終沒有好前途,惡人的燈必要熄滅。
21 ௨௧ என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.
我兒,上主和君王,你都要敬畏;對他們二者,皆不可觸怒;
22 ௨௨ திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?
因為他們的懲罰可突然而至;他們的摧殘,有誰能知曉﹖
23 ௨௩ பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.
以下是智者的箴言:在判案時,顧及情面,決不公平。
24 ௨௪ துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.
誰對惡人說:「你是正義的。」人民必罵他,百姓必恨他。
25 ௨௫ அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
按公道加罰的,必事事順遂;美好的祝福,必臨於其身。
26 ௨௬ செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
應答適宜的人,宛如與人接吻。
27 ௨௭ வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
你要先在外經營好事業,在田間將工作準備停當,然後纔可建立你的家室。
28 ௨௮ நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
不要輕易作證,反對你的近人;也不要以你的口舌,欺騙他人。
29 ௨௯ அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
不可說:「人怎樣待我,我怎樣待人;照人之所行,我向他還報。」
30 ௩0 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
我走過懶惰人的田地,經過愚昧人的葡萄園:
31 ௩௧ இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.
看,到處是荊棘,滿地是蒺黎,石牆也倒了!
32 ௩௨ அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
我看了,便心下自思;我見了,取得了教訓:「
33 ௩௩ இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
再睡片刻,再假寐片刻,再抱臂躺臥片刻」──
34 ௩௪ உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
這樣,貧窮就要如同竊賊,困乏也要如同武士,向你侵襲。

< நீதிமொழிகள் 24 >