< நீதிமொழிகள் 21 >

1 ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
Срце је царево у руци Господу као потоци водени; куда год хоће, савија га.
2 மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.
Сваки се пут човеку чини прав, али Господ испитује срца.
3 பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
Да се чини правда и суд, милије је Господу него жртва.
4 மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
Поносите очи и надуто срце и орање безбожничко грех је.
5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.
Мисли вредног човека доносе обиље, а сваког нагла сиромаштво.
6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.
Благо сабрано језиком лажљивим таштина је која пролази међу оне који траже смрт.
7 துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.
Грабеж безбожних однеће их, јер не хтеше чинити што је право.
8 குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.
Чији је пут крив, он је туђ; а ко је чист, његово је дело право.
9 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
Боље је седети у углу од крова него са женом свадљивом у кући заједничкој.
10 ௧0 துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.
Душа безбожникова жели зло, ни пријатељ његов не налази милости у њега.
11 ௧௧ பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
Кад подсмевач бива каран, луди мудра; и кад се мудри поучава, прима знање.
12 ௧௨ நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
Учи се праведник од куће безбожникове, кад се безбожници обарају у зло.
13 ௧௩ ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Ко затискује ухо своје од вике убогог, викаће и сам, али неће бити услишен.
14 ௧௪ இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.
Дар у тајности утишава гнев и поклон у недрима жестоку срдњу.
15 ௧௫ நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும்.
Радост је праведнику чинити што је право, а страх онима који чине безакоње.
16 ௧௬ விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான்.
Човек који зађе с пута мудрости починуће у збору мртвих.
17 ௧௭ சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.
Ко љуби весеље, биће сиромах; ко љуби вино и уље, неће се обогатити.
18 ௧௮ நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
Откуп за праведнике биће безбожник и за добре безаконик.
19 ௧௯ சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
Боље је живети у земљи пустој него са женом свадљивом и гневљивом.
20 ௨0 வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
Драгоцено је благо и уље у стану мудрога, а човек безуман прождире га.
21 ௨௧ நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
Ко иде за правдом и милошћу, наћи ће живот, правду и славу.
22 ௨௨ பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான்.
У град јаких улази мудри, и обара силу у коју се уздају.
23 ௨௩ தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
Ко чува уста своја и језик свој, чува душу своју од невоља.
24 ௨௪ அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.
Поноситом и обесном име је подсмевач, који све ради бесно и охоло.
25 ௨௫ சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.
Лењивца убија жеља, јер руке његове неће да раде;
26 ௨௬ அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.
Сваки дан жели; а праведник даје и не штеди.
27 ௨௭ துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.
Жртва је безбожничка гад, а камоли кад је приносе у греху?
28 ௨௮ பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான்.
Лажни сведок погинуће, а човек који слуша говориће свагда.
29 ௨௯ துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.
Безбожник је безобразан, а праведник удешава своје путе.
30 ௩0 யெகோவாவுக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.
Нема мудрости ни разума ни савета насупрот Богу.
31 ௩௧ குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.
Коњ се опрема за дан боја, али је у Господа спасење.

< நீதிமொழிகள் 21 >