< நீதிமொழிகள் 20 >
1 ௧ திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
Вино — то насмі́шник, напій п'янки́й — галасу́н, і кожен, хто блу́дить у ньому, немудрий.
2 ௨ ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.
Страх царя — як рик лева; хто до гніву дово́дить його́, — проти свого життя прогрішає.
3 ௩ வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
Слава люди́ні, що гнів покидає, а кожен глупа́к вибуха́є.
4 ௪ சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
Лінивий не о́ре із о́сени, а захоче в жнива́ — і нічо́го нема.
5 ௫ மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
Рада в серці люди́ни — глибока вода, і розумна люди́на її повиче́рпує.
6 ௬ மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?
Багато людей себе звуть милосердними, та вірну люди́ну хто зна́йде?
7 ௭ நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.
У своїй непови́нності праведний ходить, — блаженні по ньому сини його!
8 ௮ நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.
Цар сидить на судде́вім престолі, всяке зло розганяє своїми очима.
9 ௯ என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?
Хто скаже: „Очи́стив я серце своє, очистився я від свого гріха́?“
10 ௧0 வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
Вага неоднакова, неоднакова міра, — обо́є вони — то оги́да для Господа.
11 ௧௧ பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.
Навіть юна́к буде пі́знаний з чи́нів своїх, — чи чин його чистий й чи про́стий.
12 ௧௨ கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார்.
Ухо, що слухає, й око, що бачить, — Господь учинив їх обо́є.
13 ௧௩ தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
Не кохайся в спанні́, щоб не збідні́ти; розплю́щ свої очі — та хлібом наси́ться!
14 ௧௪ வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
„Зле, зле!“каже той, хто купує, а як пі́де собі, тоді хва́литься ку́пном.
15 ௧௫ பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.
Є золото й пе́рел багато, та розумні уста́ — найцінніший то по́суд.
16 ௧௬ அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
Візьми його о́діж, бо він поручивсь за чужого, і за чужи́нку візьми його за́став.
17 ௧௭ வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
Хліб з неправди солодкий люди́ні, та піско́м потім бу́дуть напо́внені у́ста її.
18 ௧௮ ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய்.
Тримаються за́міри радою, і війну прова́дь мудрими ра́дами.
19 ௧௯ தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.
Виявляє обмо́вник таємне, а ти не втручайся до того, ле́гко хто розту́лює уста свої.
20 ௨0 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
Хто кляне свого батька та матір свою, — погасне світильник йому серед те́мряви!
21 ௨௧ ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
Спа́док спо́чатку заскоро набу́тий, — не буде кінець його поблагосло́влений!
22 ௨௨ தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
Не кажи: „Надолу́жу я зло!“— май надію на Господа, і Він допоможе тобі.
23 ௨௩ வெவ்வேறான நிறைகற்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
Вага неоднакова — то оги́да для Господа, а ома́нливі ша́льки не добрі.
24 ௨௪ யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?
Від Господа — кроки люди́ни, а люди́на — як вона зрозуміє дорогу свою?
25 ௨௫ பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.
Тене́та люди́ні казати „святе́“нерозважно, а зго́дом свої обітни́ці досліджувати.
26 ௨௬ ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
Мудрий цар розпо́рошить безбожних, і зве́рне на них своє ко́ло для мук.
27 ௨௭ மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
Дух люди́ни — світильник Господній, що все ну́тро обшукує.
28 ௨௮ தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.
Милість та правда царя стережуть, і трона свого він підтримує милістю.
29 ௨௯ வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
Окраса юна́цтва — їхня сила, а пишність стари́х — сивина́.
30 ௩0 காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.
Синяки́ від побоїв — то масть лікува́льна на злого, та вдари нутру́ живота.