< நீதிமொழிகள் 2 >

1 என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,
我兒,你若接受我的話,把我的誡命存在心中,
2 நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
側耳細聽智慧,專心尋求睿智;
3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
你若呼求明哲,揚聲召尋睿智;
4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,
你若尋求她如尋求銀子,搜索她如搜索寶藏,
5 அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
你必能領悟什麼是敬畏上主,也能明白什麼是認識天主。
6 யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.
因為,恩賜智慧的是上主,知識和睿智都出自他的口。
7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.
他給正直人保留了救援,又是行止成全者的護盾。
8 அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
他護守正直人的行徑,他保衛虔誠者的道路;
9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.
這樣,你必能明瞭仁義和公平,明瞭正直和一切向善的道路。
10 ௧0 ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,
如果智慧進入了你的心,智識成了你的喜樂,
11 ௧௧ நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
慎思就必監護你,睿智也必防守你,
12 ௧௨ அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,
使你遠離邪道,遠離言詞荒謬的人:
13 ௧௩ இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
即那些離棄正道,走上黑暗之途,
14 ௧௪ தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
喜愛行惡,在邪惡中喜樂的人。
15 ௧௫ மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
他們的道路彎曲不直,他們的行徑邪僻不正。
16 ௧௬ தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
智慧將救你脫離淫婦,脫離甘言蜜語的娼妓。
17 ௧௭ ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.
她離棄了少年時的良友,忘記了她的天主的盟約;
18 ௧௮ அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.
為此,她的家屬趨向死亡,她的行徑通往黃泉;
19 ௧௯ அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
凡行近她的人,沒有一個返回,再不會走上生路。
20 ௨0 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.
為此,你應走善人的道路,持守義人的行徑,
21 ௨௧ நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
因為只有正直的人纔能住在地上,只有成全的人方得在那裏居留。
22 ௨௨ துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.
但是,作惡的人必由地上剷除,違法的人必由其中拔除。

< நீதிமொழிகள் 2 >