< நீதிமொழிகள் 19 >
1 ௧ மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
Сиромах који ходи у безазлености својој бољи је него опаки уснама својим, који је безуман.
2 ௨ ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
Кад је душа без знања, није добро; и ко је брзих ногу, спотиче се.
3 ௩ மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
Лудост човечија превраћа пут његов, а срце се његово гневи на Господа.
4 ௪ செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
Богатство прибавља много пријатеља, а сиромаха оставља пријатељ његов.
5 ௫ பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Лажан сведок неће остати без кара, и ко говори лаж, неће побећи.
6 ௬ பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
Многи угађају кнезу, и свак је пријатељ човеку податљивом.
7 ௭ தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
На сиромаха мрзе сва браћа његова, још више се пријатељи његови удаљују од њега; виче за њима, али их нема.
8 ௮ ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
Ко прибавља разум, љуби душу своју; и ко пази на мудрост, наћи ће добро.
9 ௯ பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
Сведок лажан неће остати без кара, и ко говори лаж, погинуће.
10 ௧0 மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
Не доликују безумном милине, ни слузи да влада кнезовима.
11 ௧௧ மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
Разум задржава човека од гнева, и част му је мимоићи кривицу.
12 ௧௨ ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
Царева је срдња као рика младог лава, и љубав је његова као роса трави.
13 ௧௩ மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
Безуман је син мука оцу свом, и свадљивост женина непрестано прокисивање.
14 ௧௪ வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
Кућа и имање наслеђује се од отаца; а од Господа је разумна жена.
15 ௧௫ சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
Леност наводи тврд сан, и немарљива душа гладоваће.
16 ௧௬ கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
Ко држи заповести, чува душу своју; а ко не мари за путеве своје, погинуће.
17 ௧௭ ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
Господу позаима ко поклања сиромаху, и платиће му за добро његово.
18 ௧௮ நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
Карај сина свог докле има надања и на погибао његову да не прашта душа твоја.
19 ௧௯ கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
Велик гнев показуј кад прашташ кар, и кад опростиш, после већма покарај.
20 ௨0 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Слушај савет и примај наставу, да после будеш мудар.
21 ௨௧ மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
Много има мисли у срцу човечијем, али шта Господ науми оно ће остати.
22 ௨௨ நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
Жеља човеку треба да је да чини милост, а бољи је сиромах него лажа.
23 ௨௩ யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
Страх је Господњи на живот; у кога је он, борави сит, нити га походи зло.
24 ௨௪ சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
Лењивац крије руку своју у недра, ни к устима својим не приноси је.
25 ௨௫ பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
Удри подсмевача да луди омудра, и разумног накарај да разуме науку.
26 ௨௬ தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
Син срамотан и прекоран упропашћује оца и одгони матер.
27 ௨௭ என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே.
Немој, сине, слушати науке која одводи од речи разумних.
28 ௨௮ அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
Неваљао сведок подсмева се правди, и уста безбожника прождиру на неправду.
29 ௨௯ பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.
Готови су подсмевачима судови и безумницима бој на леђа.