< நீதிமொழிகள் 18 >
1 ௧ பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
自己を人と異にする者はおのれの欲ずるところのみを求めてすべての善き考察にもとる
2 ௨ மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
愚なる者は明哲を喜ばず 惟おのれの心意を顕すことを喜ぶ
3 ௩ துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
惡者きたれば藐視したがひてきたり 恥きたれば凌辱もともに來る
4 ௪ மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.
人の口の言は深水の如し 湧てながるる川 智慧の泉なり
5 ௫ வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.
惡者を偏視るは善らず 審判をなして義者を惡しとするも亦善らず
6 ௬ மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
愚なる者の口唇はあらそひを起し その口は打るることを招く
7 ௭ மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.
愚なる者の口はおのれの敗壊となり その口唇はおのれの霊魂の罟となる
8 ௮ கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
人の是非をいふものの言はたはぶれのごとしといへども反つて腹の奥にいる
9 ௯ தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
その行爲をおこたる者は滅すものの兄弟なり
10 ௧0 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
ヱホバの各はかたき櫓のごとし 義者は之に走りいりて救を得
11 ௧௧ செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
富者の資財はその堅き城なり これを高き石垣の如くに思ふ
12 ௧௨ அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
人の心のたかぶりは滅亡に先だち 謙遜はたふとまるる事にさきだつ
13 ௧௩ காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.
いまだ事をきかざるさきに應ふる者は愚にして辱をかうぶる
14 ௧௪ மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
人の心は尚其疾を忍ぶべし されど心の傷める時は誰かこれに耐んや
15 ௧௫ புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
哲者の心は知識をえ 智慧ある者の耳は知識を求む
16 ௧௬ ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
人の贈物はその人のために道をひらき かつ貴きものの前にこれを導く
17 ௧௭ தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
先に訴訟の理由をのぶるものは正義に似たれども その鄰人きたり詰問ひてその事を明かにす
18 ௧௮ சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.
籤は争端をとどめ且つよきものの間にへだてとなる
19 ௧௯ பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.
怒れる兄弟はかたき城にもまさりて説き伏せがたし 兄弟のあらそひは檜の貫木のごとし
20 ௨0 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
人は口の徳によりて腹をあかし その口唇の徳によりて自ら飽べし
21 ௨௧ மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
死生は舌の權能にあり これを愛する者はその果を食はん
22 ௨௨ மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
妻を得るものは美物を得るなり 且ヱホバより恩寵をあたへらる
23 ௨௩ தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.
貧者は哀なる言をもて乞ひ 富人は厲しき答をなす
24 ௨௪ நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.
多の友をまうくる人は遂にその身を亡す 但し兄弟よりもたのもしき知己もまたあり