< நீதிமொழிகள் 17 >
1 ௧ சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
Parempi kuiva kannikka rauhassa kuin talon täysi uhripaistia riidassa.
2 ௨ புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
Taitava palvelija hallitsee kunnotonta poikaa ja pääsee perinnönjaolle veljesten rinnalla.
3 ௩ வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
Hopealle sulatin, kullalle uuni, mutta sydämet koettelee Herra.
4 ௪ தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
Paha kuuntelee häijyjä huulia, petollisuus kuulee pahoja kieliä.
5 ௫ ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
Joka köyhää pilkkaa, se herjaa hänen luojaansa; joka toisen onnettomuudesta iloitsee, ei jää rankaisematta.
6 ௬ பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
Vanhusten kruunu ovat lastenlapset, ja isät ovat lasten kunnia.
7 ௭ மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
Ei sovi houkalle ylevä puhe, saati sitten ruhtinaalle valhe.
8 ௮ லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
Lahjus on käyttäjänsä silmissä kallis kivi: mihin vain hän kääntyy, hän menestyy.
9 ௯ குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
Joka rikkeen peittää, se rakkautta harrastaa; mutta joka asioita kaivelee, se erottaa ystävykset.
10 ௧0 மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
Nuhde pystyy paremmin ymmärtäväiseen kuin sata lyöntiä tyhmään.
11 ௧௧ தீயவன் கலகத்தையே தேடுகிறான்; கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
Pelkkää onnettomuutta hankkii kapinoitsija, mutta häntä vastaan lähetetään armoton sanansaattaja.
12 ௧௨ தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
Kohdatkoon miestä karhu, jolta on riistetty poikaset, mutta älköön tyhmä hulluudessansa.
13 ௧௩ நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
Joka hyvän pahalla palkitsee, sen kodista ei onnettomuus väisty.
14 ௧௪ சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
Alottaa tora on päästää vedet valloilleen; herkeä, ennenkuin riita syttyy.
15 ௧௫ துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
Syyllisen syyttömäksi ja syyttömän syylliseksi tekijä ovat kumpikin Herralle kauhistus.
16 ௧௬ ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
Mitä hyötyä on rahasta tyhmän käsissä? Viisauden hankkimiseen ei ole ymmärrystä.
17 ௧௭ நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
Ystävä rakastaa ainiaan ja veli syntyy varaksi hädässä.
18 ௧௮ புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
Mieltä vailla on mies, joka kättä lyöpi, joka menee toista takaamaan.
19 ௧௯ விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
Joka toraa rakastaa, se rikkomusta rakastaa; joka ovensa korottaa, se hankkii kukistumistaan.
20 ௨0 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
Väärämielinen ei onnea löydä, ja kavalakielinen suistuu onnettomuuteen.
21 ௨௧ மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
Tyhmä on murheeksi siittäjällensä, ja houkan isä on iloa vailla.
22 ௨௨ மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
Terveydeksi on iloinen sydän, mutta murtunut mieli kuivuttaa luut.
23 ௨௩ துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
Jumalaton ottaa lahjuksen vastaan toisen povelta vääristääksensä oikeuden tiet.
24 ௨௪ ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
Ymmärtäväisellä on viisaus kasvojensa edessä, mutta tyhmän silmät kiertävät maailman rantaa.
25 ௨௫ மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
Tyhmä poika on isällensä suruksi ja synnyttäjällensä mielihaikeaksi.
26 ௨௬ நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
Paha jo sekin, jos syytöntä sakotetaan; kovin kohtuutonta, jos jaloja lyödään.
27 ௨௭ அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Joka hillitsee sanansa, on taitava, ja mielensä malttava on ymmärtäväinen mies.
28 ௨௮ பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Hullukin käy viisaasta, jos vaiti on; joka huulensa sulkee, on ymmärtäväinen.