< நீதிமொழிகள் 15 >
1 ௧ சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
回答柔和,使怒消退; 言语暴戾,触动怒气。
2 ௨ ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
智慧人的舌善发知识; 愚昧人的口吐出愚昧。
3 ௩ யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
耶和华的眼目无处不在; 恶人善人,他都鉴察。
4 ௪ ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
温良的舌是生命树; 乖谬的嘴使人心碎。
5 ௫ மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
愚妄人藐视父亲的管教; 领受责备的,得着见识。
6 ௬ நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
义人家中多有财宝; 恶人得利反受扰害。
7 ௭ ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
智慧人的嘴播扬知识; 愚昧人的心并不如此。
8 ௮ துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
恶人献祭,为耶和华所憎恶; 正直人祈祷,为他所喜悦。
9 ௯ துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
恶人的道路,为耶和华所憎恶; 追求公义的,为他所喜爱。
10 ௧0 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
舍弃正路的,必受严刑; 恨恶责备的,必致死亡。
11 ௧௧ பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? (Sheol )
阴间和灭亡尚在耶和华眼前, 何况世人的心呢? (Sheol )
12 ௧௨ பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
亵慢人不爱受责备; 他也不就近智慧人。
13 ௧௩ மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
心中喜乐,面带笑容; 心里忧愁,灵被损伤。
14 ௧௪ புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
聪明人心求知识; 愚昧人口吃愚昧。
15 ௧௫ சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நிரந்தர விருந்து.
困苦人的日子都是愁苦; 心中欢畅的,常享丰筵。
16 ௧௬ சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
少有财宝,敬畏耶和华, 强如多有财宝,烦乱不安。
17 ௧௭ பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
吃素菜,彼此相爱, 强如吃肥牛,彼此相恨。
18 ௧௮ கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
暴怒的人挑启争端; 忍怒的人止息纷争。
19 ௧௯ சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
懒惰人的道像荆棘的篱笆; 正直人的路是平坦的大道。
20 ௨0 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
智慧子使父亲喜乐; 愚昧人藐视母亲。
21 ௨௧ மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
无知的人以愚妄为乐; 聪明的人按正直而行。
22 ௨௨ ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
不先商议,所谋无效; 谋士众多,所谋乃成。
23 ௨௩ மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
口善应对,自觉喜乐; 话合其时,何等美好。
24 ௨௪ கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். (Sheol )
智慧人从生命的道上升, 使他远离在下的阴间。 (Sheol )
25 ௨௫ அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
耶和华必拆毁骄傲人的家, 却要立定寡妇的地界。
26 ௨௬ துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
恶谋为耶和华所憎恶; 良言乃为纯净。
27 ௨௭ பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
贪恋财利的,扰害己家; 恨恶贿赂的,必得存活。
28 ௨௮ நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
义人的心,思量如何回答; 恶人的口吐出恶言。
29 ௨௯ துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
耶和华远离恶人, 却听义人的祷告。
30 ௩0 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
眼有光,使心喜乐; 好信息,使骨滋润。
31 ௩௧ வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்திலே தங்கும்.
听从生命责备的, 必常在智慧人中。
32 ௩௨ புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
弃绝管教的,轻看自己的生命; 听从责备的,却得智慧。
33 ௩௩ யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
敬畏耶和华是智慧的训诲; 尊荣以前,必有谦卑。