< நீதிமொழிகள் 14 >
1 ௧ புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
智慧的婦女,足以興家;愚昧的婦女,親手將家拆毀。
2 ௨ நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.
履行正路的人,敬畏上主;愛走曲徑的人,輕視上主。
3 ௩ மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
愚昧人口中,有傲慢的根苗;智慧人的唇舌,是自己的保障。
4 ௪ எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
沒有耕牛,沒有五穀;耕牛愈雄壯,收穫愈豐富。
5 ௫ மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
忠實的證人,決不說謊;虛偽的證人,謊言連篇。
6 ௬ பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
輕狂人求智,只屬徒然;明智人求知,卻很容易。
7 ௭ மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
你應遠離愚昧的人,由他口中決得不到明哲。
8 ௮ தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
明智人的智慧,在於審察自己的行徑;愚昧人的昏愚,在於自欺欺人。
9 ௯ மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
罪孽住在愚昧人中,恩愛與正直人為伍。
10 ௧0 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
心頭的愁苦,唯有自己知;心中的喜樂,他人無分享。
11 ௧௧ துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
邪僻人的家庭,必遭破壞;正直人的帳幕,卻要興隆。
12 ௧௨ மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
有些道路,看來正直;走到盡頭,卻是死路。
13 ௧௩ சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
連在歡笑中,心亦有感傷;歡笑的結局,往往是痛苦。
14 ௧௪ பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
變心的人,必自嘗其果;良善的人,必得其善報。
15 ௧௫ பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
幼稚的人,有話必信;明智的人,步步謹慎。
16 ௧௬ ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.
智慧人戒避邪惡,愚昧人驕矜自負。
17 ௧௭ முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
易怒的人,做事昏愚;慎思的人,事事含忍。
18 ௧௮ பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
愚昧的人,以愚昧為基業;明智的人,以知識為冠冕。
19 ௧௯ தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
歹徒將伏在善人面前,惡人將跪在義人門前。
20 ௨0 தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
貧窮的人,為親朋所厭;富貴的人,則高朋滿座。
21 ௨௧ பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
藐視近人,便是犯罪;憐憫苦人,纔是有福。
22 ௨௨ தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
陰謀邪惡的人,豈非走入歧途﹖策劃行善的人,必獲慈惠忠誠。
23 ௨௩ எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.
一切勞苦皆有利益;只有閒談,引人貧窮。
24 ௨௪ ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
智慧人的冠冕,是他們的機智;愚昧人的冠冕,是他們的糊塗。
25 ௨௫ மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
忠實的見證,救人性命;作假證的人,危害他人。
26 ௨௬ யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
敬畏上主,是穩固的靠山;為他的子孫,也是個避難所。
27 ௨௭ யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
敬畏上主,是生命的泉源,使人脫免死亡的羅網。
28 ௨௮ மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
人民眾多,是君王的光榮;庶民缺少,是王侯的沒落。
29 ௨௯ நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.
緩於發怒的人,必甚有見識;脾氣暴躁的人,必大顯愚昧。
30 ௩0 சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.
心平氣和,使身體康健;心懷嫉忌,使骨骸腐蝕。
31 ௩௧ தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
欺壓窮人的,就是凌辱他的造主;憐恤苦人的,就是尊敬他的造主。
32 ௩௨ துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
惡人因自己的邪惡,必被毀滅;義人因自己的正義,有所憑藉。
33 ௩௩ புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
智慧居於哲人的心中,愚人的懷中一無所見。
34 ௩௪ நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
正義能以興邦立國,罪惡卻使人民衰落。
35 ௩௫ ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.
明哲的臣僕,蒙受君王的寵幸;無用的臣僕,必遭君王的盛怒。