< நீதிமொழிகள் 13 >

1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.
智慧ある子は父の敎訓をきき 戯謔者は懲治をきかず
2 மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.
人はその口の徳によりて福祉をくらひ悖逆者の霊魂は強暴をくらふ
3 தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
その口を守る者はその生命を守る その口唇を大きくひらく者には滅亡きたる
4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;
惰る者はこころに慕へども得ることなし 勤めはたらく者の心は豊饒なり
5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.
義者は虚偽の言をにくみ 惡者ははぢをかうむらせ面を赤くせしむ
6 நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
義は道を直くあゆむ者をまもり 惡は罪人を倒す
7 ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.
自ら富めりといひあらはして些少の所有もなき者あり 自ら貧しと稱へて資財おほき者あり
8 மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.
人の資財はその生命を贖ふものとなるあり 然ど貧者は威嚇をきくことあらず
9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
義者の光は輝き惡者の燈火はけさる
10 ௧0 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
驕傲はただ爭端を生ず 勸告をきく者は智慧あり
11 ௧௧ வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
詭計をもて得たる資財は減る されど手をもて聚めたくはふる者はこれを増すことを得
12 ௧௨ நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.
望を得ること遅きときは心を疾しめ 願ふ所旣にとぐるときは生命の樹を得たるがごとし
13 ௧௩ திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
御言をかろんずる者は亡され 誡命をおそるる者は報賞を得
14 ௧௪ ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
智慧ある人の敎訓はいのちの泉なり 能く人をして死の罟を脱れしむ
15 ௧௫ நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
善にして哲きものは恩を蒙る されど悖逆者の途は艱難なり
16 ௧௬ விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
凡そ賢者は知識に由りて事をおこなひ 愚なる者はおのれの痴を顯す
17 ௧௭ துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.
惡き使者は災禍に陷る されど忠信なる使者は良薬の如し
18 ௧௮ புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.
貧乏と恥辱とは敎訓をすつる者にきたる されど譴責を守る者は尊まる
19 ௧௯ வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.
望を得れば心に甘し 愚なる者は惡を棄つることを嫌ふ
20 ௨0 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.
智慧ある者と偕にあゆむものは智慧をえ 愚なる者の友となる者はあしくなる
21 ௨௧ பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
わざはひは罪人を追ひ 義者は善報をうく
22 ௨௨ நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
善人はその產業を子孫に遺す されど罪人の資財は義者のために蓄へらる
23 ௨௩ ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
貧しき者の新田にはおほくの糧あり されど不義によりて亡る者あり
24 ௨௪ பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
鞭をくはへざる者はその子を憎むなり 子を愛する者はしきりに之をいましむ
25 ௨௫ நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.
義しき者は食をえて飽く されど惡者の腹は空し

< நீதிமொழிகள் 13 >