< நீதிமொழிகள் 13 >
1 ௧ ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.
智慧之子,聽從父親的教訓;輕狂的人,不聽任何人規勸。
2 ௨ மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.
義人必飽嘗自己口舌的果實,惡人的慾望只有飽食強暴。
3 ௩ தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
謹口慎言,方能自保性命;信口開河,終必自取滅亡。
4 ௪ சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;
懶人雖常盼望,卻一無所得;勤勞的人,卻常如願以償。
5 ௫ நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.
義人憎惡謊言,惡人令人可憎可惡。
6 ௬ நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
正義保衛行為正直的人,邪惡卻使罪人滅亡。
7 ௭ ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.
有人自充富人,其實一貧如洗;有人佯作窮人,其實腰纏萬貫。
8 ௮ மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.
富人的錢財只是性命的贖價,窮人卻沒有這樣的威脅。
9 ௯ நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
義人的光明,必要高升;惡人的燈火,勢必熄滅。
10 ௧0 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
傲慢只有引起爭端,虛心受教的人纔有智慧。
11 ௧௧ வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
儻來之物,容易消逝;經久積存,日漸增多。
12 ௧௨ நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.
希望遲不兌現,令人心神煩惱;願望獲得滿足,像株生命樹。
13 ௧௩ திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
誰輕視法令,必遭滅亡;誰敬畏誡命,必得安全。
14 ௧௪ ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
智慧人的教訓是生命的泉源,人可賴以脫免死亡的羅網。
15 ௧௫ நற்புத்தி தயவை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
明哲的規勸,使人蒙恩,殘暴人的舉止,粗魯蠻橫。
16 ௧௬ விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
精明的人,常按理智行事;愚昧的人,只自誇其糊塗。
17 ௧௭ துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.
奸妄的使者,使人陷於災禍;忠誠的使者,給人帶來安和。
18 ௧௮ புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.
拒絕規勸的,必遭貧苦羞辱;接受懲戒的,反要受人尊敬。
19 ௧௯ வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.
願望獲得滿足,能使心靈愉快;遠離邪惡,卻為愚昧人所深惡。
20 ௨0 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.
與智慧人往來,可成智慧人;與愚昧人作伴,必受其連累。
21 ௨௧ பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
惡運追蹤罪人,義人卻得善報。
22 ௨௨ நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
善人為子子孫孫留下產業,罪人的財富是為義人積蓄。
23 ௨௩ ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
窮人開墾的田地,生產大量食物;誰若缺乏正義,定不免於滅亡。
24 ௨௪ பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
不肯使用棍杖的人,實是恨自己的兒子;真愛兒子的人,必時加以懲罰。
25 ௨௫ நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.
義人必得飽食,惡人無以果腹。