< நீதிமொழிகள் 12 >
1 ௧ புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
O que ama a correcção ama o conhecimento, mas o que aborrece a reprehensão é brutal.
2 ௨ நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
O homem de bem alcançará o favor do Senhor, mas ao homem de perversas imaginações elle condemnará.
3 ௩ துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
O homem não se estabelecerá pela impiedade, mas a raiz dos justos não será removida.
4 ௪ குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.
A mulher virtuosa é a corôa do seu senhor, mas a que faz vergonha é como apodrecimento nos seus ossos.
5 ௫ நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
Os pensamentos dos justos são juizo, mas os conselhos dos impios engano.
6 ௬ துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
As palavras dos impios são de armarem ciladas ao sangue, mas a bocca dos rectos os fará escapar.
7 ௭ துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
Transtornados serão os impios, e não serão mais, mas a casa dos justos permanecerá.
8 ௮ தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
Segundo o seu entendimento, será louvado cada qual, mas o perverso de coração estará em desprezo.
9 ௯ உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
Melhor é o que se estima em pouco, e tem servos, do que o que se honra a si mesmo e tem falta de pão.
10 ௧0 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.
O justo attende pela vida dos seus animaes, mas as misericordias dos impios são crueis.
11 ௧௧ தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
O que lavra a sua terra se fartará de pão mas o que segue os ociosos está falto de juizo.
12 ௧௨ துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
Deseja o impio a rede dos males, mas a raiz dos justos produz o seu fructo.
13 ௧௩ துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
O laço do impio está na transgressão dos labios, mas o justo sairá da angustia.
14 ௧௪ அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
Do fructo da bocca cada um se farta de bem, e a recompensa das mãos dos homens se lhe tornará.
15 ௧௫ மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
O caminho do tolo é recto aos seus olhos, mas o que dá ouvidos ao conselho é sabio.
16 ௧௬ மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
A ira do louco se conhece no mesmo dia, mas o avisado encobre a affronta.
17 ௧௭ சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
O que produz a verdade manifesta a justiça, mas a testemunha da falsidade o engano.
18 ௧௮ பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.
Ha alguns que fallam palavras como estocadas de espada, mas a lingua dos sabios é saude.
19 ௧௯ சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
O labio de verdade ficará para sempre, mas a lingua de falsidade dura por um só momento.
20 ௨0 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.
Engano ha no coração dos que maquinam mal, mas alegria teem os que aconselham a paz.
21 ௨௧ நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
Nenhum aggravo sobrevirá ao justo, mas os impios ficam cheios de mal.
22 ௨௨ பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
Os labios mentirosos são abominaveis ao Senhor, mas os que obram fielmente são o seu deleite.
23 ௨௩ விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
O homem avisado encobre o conhecimento, mas o coração dos tolos proclama a estulticia.
24 ௨௪ ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
A mão dos diligentes dominará, mas os enganadores serão tributarios.
25 ௨௫ மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
A solicitude no coração do homem o abate, mas uma boa palavra o alegra.
26 ௨௬ நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
Mais excellente é o justo do que o companheiro, mas o caminho dos impios os faz errar.
27 ௨௭ சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
O preguiçoso não assará a sua caça, mas o precioso bem do homem é ser diligente.
28 ௨௮ நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
Na vereda da justiça está a vida, e no caminho da sua carreira não ha morte.