< நீதிமொழிகள் 12 >

1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
喜愛受教的人,必喜愛智慧;憎恨規勸的人,真是糊塗。
2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
善心的人,必得上主喜悅;心術邪惡的人,必受降罰。
3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
沒有人作惡而能穩立,唯有義人的根基永不動搖。
4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.
賢能的妻子,是她丈夫的冠冕;無恥的妻子,宛如丈夫骨中的腐蝕。
5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
義人思念公正,惡人計劃詭譎。
6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
惡人的言談,是流血的陷阱;義人的口舌,設法搭救他人。
7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
惡人一旦傾覆,便不復存在;義人的家室,卻得以久存。
8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
人憑自己的識見,獲得讚美;但心地邪僻的人,必受輕視。
9 உணவில்லாதவனாக இருந்தும், தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
一個自給自足的平民,比愛排場而缺食的人,更為可貴。
10 ௧0 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.
義人珍惜禽獸的生命,惡人的心腸殘忍刻薄。
11 ௧௧ தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
自耕其地的人,必得飽食;追求虛幻的人,實屬愚昧。
12 ௧௨ துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
邪惡的想望,是惡人的羅網;義人的根基,卻永不動搖。
13 ௧௩ துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
惡人失口,自尋苦惱;義人卻能幸免受累。
14 ௧௪ அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
人必飽嘗自己口舌的果實,必按自己的行為獲得報應。
15 ௧௫ மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
愚昧的人,常以為自己的道路正直;但明智的人,卻常聽從勸告。
16 ௧௬ மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
愚昧的人,立時顯出自己的憤怒;機智的人,卻忍辱而不外露。
17 ௧௭ சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
吐露真情,是彰顯正義;作假見證,是自欺欺人。
18 ௧௮ பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.
出言不慎,有如利刃傷人;智者的口,卻常療愈他人。
19 ௧௯ சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
講實話的唇舌,永垂不朽;說謊話的舌頭,瞬息即逝。
20 ௨0 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.
圖謀惡事的,心懷欺詐;策劃和平的,必得喜樂。
21 ௨௧ நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
義人常無往不利,惡人卻備受災殃。
22 ௨௨ பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
欺詐的唇舌,為上主所深惡;行事誠實的,纔為他所中悅。
23 ௨௩ விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
機智的人,使自己的才學深藏不露;心中愚昧的人,只會彰顯自己的愚蠢。
24 ௨௪ ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
勤勞的手,必要掌權;懶慢的手,只有服役。
25 ௨௫ மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
憂鬱使人心消沉,良言使人心快活。
26 ௨௬ நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
義人給自己的友伴指示道路,惡人的行動卻引人誤入歧途。
27 ௨௭ சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
懶惰的人,無米為炊;勤勞的人,腰纏萬貫。
28 ௨௮ நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
正義的路,導向生命;邪惡的路,引人喪亡。

< நீதிமொழிகள் 12 >