< நீதிமொழிகள் 11 >
1 ௧ கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
Statera dolosa, abominatio est apud Deum: et pondus aequum, voluntas eius.
2 ௨ அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
Ubi fuerit superbia, ibi erit et contumelia: ubi autem est humilitas, ibi et sapientia.
3 ௩ செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
Simplicitas iustorum diriget eos: et supplantatio perversorum vastabit illos.
4 ௪ கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
Non proderunt divitiae in die ultionis: iustitia autem liberabit a morte.
5 ௫ உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.
Iustitia simplicis diriget viam eius: et in impietate sua corruet impius.
6 ௬ செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
Iustitia rectorum liberabit eos: et in insidiis suis capientur iniqui.
7 ௭ துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.
Mortuo homine impio, nulla erit ultra spes: et expectatio solicitorum peribit.
8 ௮ நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
Iustus de angustia liberatus est: et tradetur impius pro eo.
9 ௯ மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
Simulator ore decipit amicum suum: iusti autem liberabuntur scientia.
10 ௧0 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
In bonis iustorum exultabit civitas: et in perditione impiorum erit laudatio.
11 ௧௧ செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
Benedictione iustorum exaltabitur civitas: et ore impiorum subvertetur.
12 ௧௨ மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
Qui despicit amicum suum, indigens corde est: vir autem prudens tacebit.
13 ௧௩ புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
Qui ambulat fraudulenter, revelat arcana: qui autem fidelis est, celat amici commissum.
14 ௧௪ ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
Ubi non est gubernator, populus corruet: salus autem, ubi multa consilia.
15 ௧௫ அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
Affligetur malo, qui fidem facit pro extraneo: qui autem cavet laqueos, securus erit.
16 ௧௬ நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.
Mulier gratiosa inveniet gloriam: et robusti habebunt divitias.
17 ௧௭ தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
Benefacit animae suae vir misericors: qui autem crudelis est, etiam propinquos abiicit.
18 ௧௮ துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
Impius facit opus instabile: seminanti autem iustitiam merces fidelis.
19 ௧௯ நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.
Clementia praeparat vitam: et sectatio malorum mortem.
20 ௨0 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
Abominabile Domino cor pravum: et voluntas eius in iis, qui simpliciter ambulant.
21 ௨௧ கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
Manus in manu non erit innocens malus: semen autem iustorum salvabitur.
22 ௨௨ மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
Circulus aureus in naribus suis, mulier pulchra et fatua.
23 ௨௩ நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
Desiderium iustorum omne bonum est: praestolatio impiorum furor.
24 ௨௪ வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு.
Alii dividunt propria, et ditiores fiunt: alii rapiunt non sua, et semper in egestate sunt.
25 ௨௫ உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
Anima, quae benedicit, impinguabitur: et qui inebriat, ipse quoque inebriabitur.
26 ௨௬ தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
Qui abscondit frumenta, maledicetur in populis: benedictio autem super caput vendentium.
27 ௨௭ நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
Bene consurgit diluculo qui quaerit bona: qui autem investigator malorum est, opprimetur ab eis.
28 ௨௮ தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.
Qui confidit in divitiis suis, corruet: iusti autem quasi virens folium germinabunt.
29 ௨௯ தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
Qui conturbat domum suam, possidebit ventos: et qui stultus est, serviet sapienti.
30 ௩0 நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
Fructus iusti lignum vitae: et qui suscipit animas, sapiens est.
31 ௩௧ இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.
Si iustus in terra recipit, quanto magis impius et peccator?