< நீதிமொழிகள் 10 >

1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
ソロモンの箴言。知恵ある子は父を喜ばせ、愚かな子は母の悲しみとなる。
2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
不義の宝は益なく、正義は人を救い出して、死を免れさせる。
3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
主は正しい人を飢えさせず、悪しき者の欲望をくじかれる。
4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
手を動かすことを怠る者は貧しくなり、勤め働く者の手は富を得る。
5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
夏のうちに集める者は賢い子であり、刈入れの時に眠る者は恥をきたらせる子である。
6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
正しい者のこうべには祝福があり、悪しき者の口は暴虐を隠す。
7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
正しい者の名はほめられ、悪しき者の名は朽ちる。
8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
心のさとき者は戒めを受ける、むだ口をたたく愚かな者は滅ぼされる。
9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
まっすぐに歩む者の歩みは安全である、しかし、その道を曲げる者は災にあう。
10 ௧0 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
目で、めくばせする者は憂いをおこし、あからさまに、戒める者は平和をきたらせる。
11 ௧௧ நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
正しい者の口は命の泉である、悪しき者の口は暴虐を隠す。
12 ௧௨ பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
憎しみは、争いを起し、愛はすべてのとがをおおう。
13 ௧௩ புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
さとき者のくちびるには知恵があり、知恵のない者の背にはむちがある。
14 ௧௪ ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
知恵ある者は知識をたくわえる、愚かな者のむだ口は、今にも滅びをきたらせる。
15 ௧௫ செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
富める者の宝は、その堅き城であり、貧しい者の乏しきは、その滅びである。
16 ௧௬ நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
正しい者の受ける賃銀は命に導き、悪しき者の利得は罪に至る。
17 ௧௭ புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
教訓を守る者は命の道にあり、懲しめを捨てる者は道をふみ迷う。
18 ௧௮ பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
憎しみを隠す者には偽りのくちびるがあり、そしりを口に出す者は愚かな者である。
19 ௧௯ சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
言葉が多ければ、とがを免れない、自分のくちびるを制する者は知恵がある。
20 ௨0 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
正しい者の舌は精銀である、悪しき者の心は価値が少ない。
21 ௨௧ நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
正しい者のくちびるは多くの人を養い、愚かな者は知恵がなくて死ぬ。
22 ௨௨ யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
主の祝福は人を富ませる、主はこれになんの悲しみをも加えない。
23 ௨௩ தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
愚かな者は、戯れ事のように悪を行う、さとき人には賢い行いが楽しみである。
24 ௨௪ துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
悪しき者の恐れることは自分に来り、正しい者の願うことは与えられる。
25 ௨௫ சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
あらしが通りすぎる時、悪しき者は、もはや、いなくなり、正しい者は永久に堅く立てられる。
26 ௨௬ பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
なまけ者は、これをつかわす者にとっては、酢が歯をいため、煙が目を悩ますようなものだ。
27 ௨௭ யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
主を恐れることは人の命の日を多くする、悪しき者の年は縮められる。
28 ௨௮ நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
正しい者の望みは喜びに終り、悪しき者の望みは絶える。
29 ௨௯ யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
主は、まっすぐに歩む者には城であり、悪を行う者には滅びである。
30 ௩0 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
正しい者はいつまでも動かされることはない、悪しき者は、地に住むことができない。
31 ௩௧ நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
正しい者の口は知恵をいだし、偽りの舌は抜かれる。
32 ௩௨ நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
正しい者のくちびるは喜ばるべきことをわきまえ、悪しき者の口は偽りを語る。

< நீதிமொழிகள் 10 >