< நீதிமொழிகள் 10 >
1 ௧ சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
Salomos ordsprog. Viis søn glæder sin fader, tåbelig søn er sin moders sorg.
2 ௨ அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
Gudløsheds skatte gavner intet, men retfærd redder fra død.
3 ௩ யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
HERREN lader ej en retfærdig sulte, men gudløses attrå støder han fra sig.
4 ௪ சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
Doven hånd skaber fattigdom, flittiges hånd gør rig.
5 ௫ கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
En klog søn samler om sommeren, en dårlig sover om høsten.
6 ௬ நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Velsignelse er for retfærdiges hoved, på uret gemmer gudløses mund.
7 ௭ நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
Den retfærdiges minde velsignes, gudløses navn smuldrer hen.
8 ௮ இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
Den vise tager mod påbud, den brovtende dåre styrtes.
9 ௯ உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
Hvo lydefrit vandrer, vandrer trygt; men hvo der går krogveje, ham går det ilde.
10 ௧0 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
Blinker man med øjet, volder man ondt, den brovtende dåre styrtes.
11 ௧௧ நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Den retfærdiges mund er en livsens kilde, på uret gemmer gudløses mund.
12 ௧௨ பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
Had vækker Splid, Kærlighed skjuler alle Synder.
13 ௧௩ புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
På den kloges Læber fnder man Visdom, Stok er til Ryg på Mand uden Vid.
14 ௧௪ ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
De vise gemmer den indsigt, de har, Dårens Mund er truende Våde.
15 ௧௫ செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
Den riges Gods er hans faste Stad, Armod de ringes Våde.
16 ௧௬ நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
Den retfærdiges Vinding tjener til Liv, den gudløses Indtægt til Synd.
17 ௧௭ புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
At vogte på Tugt er Vej til Livet, vild farer den, som viser Revselse fra sig.
18 ௧௮ பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
Retfærdige Læber tier om Had, en Tåbe er den, der udspreder Rygter.
19 ௧௯ சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
Ved megen Tale undgås ej Brøde, klog er den, der vogter sin Mund.
20 ௨0 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
Den retfærdiges Tunge er udsøgt Sølv, gudløses Hjerte er intet værd.
21 ௨௧ நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
Den retfærdiges Læber nærer mange, Dårerne dør af Mangel på Vid.
22 ௨௨ யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
HERRENs Velsignelse, den gør rig, Slid og Slæb lægger intet til.
23 ௨௩ தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
For Tåben er Skændselsgerning en Leg, Visdom er Leg for Mand med Indsigt.
24 ௨௪ துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
Hvad en gudløs frygter, kommer over hans Hoved, hvad retfærdige ønsker, bliver dem givet.
25 ௨௫ சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
Når Storm farer frem, er den gudløse borte, den retfærdige står på evig Grund.
26 ௨௬ பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
Som Eddike for Tænder og Røg for Øjne så er den lade for dem, der sender ham.
27 ௨௭ யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
HERRENs Frygt lægger dage til, gudløses År kortes af.
28 ௨௮ நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
Retfærdige har Glæde i Vente, gudløses Håb vil briste.
29 ௨௯ யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
For lydefri Vandel er HERREN et Værn, men en Rædsel for Udådsmænd.
30 ௩0 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
Den retfærdige rokkes aldrig, ikke skal gudløse bo i Landet.
31 ௩௧ நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
Den retfærdiges Mund bærer Visdoms Frugt, den falske Tunge udryddes.
32 ௩௨ நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
Den retfærdiges Læber søger yndest, gudløses Mund bærer Falskheds Frugt.