< பிலிப்பியர் 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
Paulus og Timotheus, Kristi Jesu Tjener, til alle de hellige i Kristus Jesus, som ere i Filippi, med Tilsynsmænd og Menighedstjenere.
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
Nåde være med eder og Fred fra Gud vor Fader og den Herre Jesus Kristus!
3 ௩ நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
Jeg takker min Gud, så ofte jeg kommer eder i Hu,
4 ௪ நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
idet jeg altid, i hver min Bøn, beder for eder alle med Glæde,
5 ௫ உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
for eders Deltagelse i Evangeliet fra den første Dag indtil nu;
6 ௬ நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
forvisset om dette, at han, som begyndte en god Gerning i eder, vil fuldføre den indtil Jesu Kristi Dag,
7 ௭ என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
således som det jo er ret for mig at mene dette om eder alle, efterdi jeg har eder i Hjertet både under mine Lænker og under Evangeliets Forsvar og Stadfæstelse, fælles som I jo alle ere med mig om Nåden.
8 ௮ இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
Thi Gud er mit Vidne, hvorledes jeg længes efter eder alle med Kristi Jesu inderlige Kærlighed.
9 ௯ மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
Og derom beder jeg, at eders Kærlighed fremdeles må blive mere og mere rig på Erkendelse og al Skønsomhed,
10 ௧0 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
så I kunne værdsætte de forskellige Ting, for at I må være rene og uden Anstød til Kristi Dag,
11 ௧௧ நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
fyldte med Retfærdigheds Frugt, som virkes ved Jesus Kristus, Gud til Ære og Pris.
12 ௧௨ சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
Men jeg vil, I skulle vide, Brødre! at mine Forhold snarere have tjent til Evangeliets Fremme,
13 ௧௩ அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
så at det er blevet åbenbart for hele Livvagten og for alle de øvrige, at mine Lænker bæres for Kristi Skyld,
14 ௧௪ சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
og de fleste af Brødrene fik i Tillid til Herren ved mine Lænker end mere Dristighed til at tale Guds Ord uden Frygt.
15 ௧௫ சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
Nogle prædike vel også Kristus for Avinds og Kivs Skyld, men nogle også i en god Mening.
16 ௧௬ சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
Disse gøre det af Kærlighed, vidende, at jeg er sat til at forsvare Evangeliet;
17 ௧௭ நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
men hine forkynde Kristus af Egennytte, ikke ærligt, men i den Tanke at føje Trængsel til mine Lænker.
18 ௧௮ இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
Hvad så? Kristus forkyndes dog på enhver Måde, være sig på Skrømt eller i Sandhed; og derover glæder jeg mig, og jeg vil også fremdeles glæde mig.
19 ௧௯ அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
Thi jeg ved, at dette skal blive mig til Frelse ved eders Bøn og Jesu Kristi Ånds Hjælp,
20 ௨0 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
efter min Længsel og mit Håb, at jeg i intet skal blive til Skamme, men at Kristus skal med al Frimodighed, som altid, så også nu, forherliges i mit Legeme, være sig ved Liv eller ved Død.
21 ௨௧ கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
Thi det at leve er mig Kristus og at dø en Vinding.
22 ௨௨ ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
Men dersom dette at leve i Kødet skaffer mig Frugt af min Gerning, så ved jeg ikke, hvad jeg skal vælge;
23 ௨௩ ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
men jeg står tvivlrådig imellem de to Ting, idet jeg har Lysten til at bryde op og være sammen med Kristus; thi dette var såre meget bedre;
24 ௨௪ அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
men at forblive i Kødet er mere nødvendigt for eders Skyld.
25 ௨௫ இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
Og i Forvisning herom ved jeg, at jeg skal blive i Live og forblive hos eder alle til eders Fremgang og Glæde i Troen,
26 ௨௬ உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
for at eders Ros ved mig kan blive rig i Kristus Jesus, ved at jeg atter kommer til Stede iblandt eder.
27 ௨௭ நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
Kun skulle I leve Kristi Evangelium værdigt, for at, hvad enten jeg kommer og ser eder eller er fraværende, jeg dog kan høre om eder, at I stå faste i een Ånd, så at I med een Sjæl stride tilsammen for Troen på Evangeliet
28 ௨௮ நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
og ikke lade eder forfærde i nogen Ting af Modstanderne; thi dette er for dem et Tegn på Undergang, men for eder på Frelse, og det fra Gud.
29 ௨௯ ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
Thi eder er det forundt for Kristi Skyld - ikke alene at tro på ham, men også at lide for hans Skyld,
30 ௩0 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
idet I have den samme Kamp, som I have set på mig og nu høre om mig.