< பிலிப்பியர் 4 >

1 ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள்.
אחים יקרים, אני אוהב אתכם ומתגעגע אליכם מאוד, כי אתם מקור שמחה בשבילי וגמול על עבודתי. חברים אהובים, אנא, היו נאמנים לאדון.
2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
יש לי בקשה אל שתי הנשים היקרות, אַבְהוֹדִיָּה וסוּנְטִיכִי: אני מתחנן לפניכן, בשם אלוהים, הפסיקו לריב – התפייסו ושובו להיות חברות!
3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடும் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு அதிகமாக உழைத்தார்கள், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் இருக்கிறது.
ואני מבקש מכם, שותפי לעבודה, עזרו לנשים האלה, כי הן עבדו איתי בהפצת הבשורה על ישוע המשיח. הן עבדו גם עם קלימיס ועם שאר חברי לעבודה, ושמם כתוב בספר החיים.
4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.
שמחו תמיד בישוע אדוננו; אני חוזר ואומר: שמחו!
5 உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார்.
הוכיחו לכולם שאינכם אנוכיים ושאתם מתחשבים תמיד באחרים. זכרו, אדוננו ישוע קרוב!
6 நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
אל תדאגו לדבר, אלא התפללו ואמרו לאלוהים למה אתם זקוקים, ואל תשכחו להודות לו.
7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
אם באמת תעשו כך, אלוהים ישכין בלבכם שלווה נפלאה שאינכם מסוגלים אפילו לתאר לעצמכם.
8 கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
אחים יקרים, לסיום מכתבי ברצוני לומר לכם דבר נוסף: רכזו את תשומת לבכם בכל דבר טוב, אמיתי וישר. חישבו על דברים טהורים ונעימים; חישבו על כל דבר משמח, ועל כל מה שאתם יכולים להודות עליו לאלוהים.
9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.
המשיכו לקיים הלכה למעשה את כל אשר לימדתי אתכם, ואת כל אשר ראיתם אותי עושה, ואלוהי השלום יהיה אתכם.
10 ௧0 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
אני אסיר תודה לכם ומודה לאלוהים על ששוב עזרתם לי. אני יודע שתמיד רציתם לשלוח לי מתנות כפי שמשיגה ידכם, אולם במשך זמן־מה לא הייתה לכם אפשרות לכך.
11 ௧௧ என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
איני אומר זאת משום שאני זקוק לכסף, שכן למדתי להסתפק במה שיש לי, אם בהרבה ואם במעט.
12 ௧௨ தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன்.
אני יודע כיצד לחיות בעוני או בעושר. למדתי לשמוח ולהסתפק בחלקי בכל מצב – בשובע או ברעב, בשפע או במחסור.
13 ௧௩ என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.
כל זאת משום שאני מסוגל לעשות כל מה שאלוהים רוצה שאעשה, בעזרת המשיח שנותן לי כוח.
14 ௧௪ ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது.
ובכל זאת, נהגתם יפה מאוד כשעזרתם לי במצוקתי הנוכחית.
15 ௧௫ மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும்.
כידוע לכם, כשעזבתי את מקדוניה ובאתי לספר לכם את הבשורה בפעם הראשונה, רק אתם, אנשי פיליפי, עזרתם לי מבחינה כלכלית. אף קהילה אחרת לא עזרה לי,
16 ௧௬ நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள்.
גם בהיותי בתסלוניקי שלחתם לי מתנות פעמיים.
17 ௧௭ உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன்.
אני מעריך מאוד את מתנותיכם, אבל מעל לכל אני שמח על הגמול שייתן לכם אלוהים בעד טוב־לבכם.
18 ௧௮ எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
כרגע יש לי את כל מה שאני צריך, ואפילו יותר ממה שאני צריך! עדיין נשאר לי די והותר מהמתנות ששלחתם לי ביד אפפרודיטוס. אני יודע שמתנות אלה הן קורבן יקר מאוד, ואלוהים מעריך זאת.
19 ௧௯ என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
אלוהים ייתן לכם כל מה שאתם צריכים, מתוך אוצרו בשמים, בזכות קורבנו של המשיח למעננו.
20 ௨0 நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
שבח ותהילת עולם לאבינו שבשמים. – אמן. (aiōn g165)
21 ௨௧ கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் எல்லோருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
מסרו דרישת שלום חמה בשמי לכל המאמינים בפיליפי. גם האחים הנמצאים איתי כאן מוסרים דרישת שלום.
22 ௨௨ பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
כל שאר המאמינים מוסרים דרישת שלום, במיוחד אלה שנמצאים בבית הקיסר.
23 ௨௩ நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
חסד אדוננו ישוע המשיח עם רוחכם. – אמן.

< பிலிப்பியர் 4 >