< பிலிப்பியர் 2 >
1 ௧ ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,
১খ্রীষ্টাদ্ যদি কিমপি সান্ত্ৱনং কশ্চিৎ প্রেমজাতো হর্ষঃ কিঞ্চিদ্ আত্মনঃ সমভাগিৎৱং কাচিদ্ অনুকম্পা কৃপা ৱা জাযতে তর্হি যূযং মমাহ্লাদং পূরযন্ত
2 ௨ நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
২একভাৱা একপ্রেমাণ একমনস একচেষ্টাশ্চ ভৱত|
3 ௩ ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.
৩ৱিরোধাদ্ দর্পাদ্ ৱা কিমপি মা কুরুত কিন্তু নম্রতযা স্ৱেভ্যোঽপরান্ ৱিশিষ্টান্ মন্যধ্ৱং|
4 ௪ அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.
৪কেৱলম্ আত্মহিতায ন চেষ্টমানাঃ পরহিতাযাপি চেষ্টধ্ৱং|
5 ௫ கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
৫খ্রীষ্টস্য যীশো র্যাদৃশঃ স্ৱভাৱো যুষ্মাকম্ অপি তাদৃশো ভৱতু|
6 ௬ அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல்,
৬স ঈশ্ৱররূপী সন্ স্ৱকীযাম্ ঈশ্ৱরতুল্যতাং শ্লাঘাস্পদং নামন্যত,
7 ௭ தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.
৭কিন্তু স্ৱং শূন্যং কৃৎৱা দাসরূপী বভূৱ নরাকৃতিং লেভে চ|
8 ௮ அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
৮ইত্থং নরমূর্ত্তিম্ আশ্রিত্য নম্রতাং স্ৱীকৃত্য মৃত্যোরর্থতঃ ক্রুশীযমৃত্যোরেৱ ভোগাযাজ্ঞাগ্রাহী বভূৱ|
9 ௯ ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
৯তৎকারণাদ্ ঈশ্ৱরোঽপি তং সর্ৱ্ৱোন্নতং চকার যচ্চ নাম সর্ৱ্ৱেষাং নাম্নাং শ্রেষ্ঠং তদেৱ তস্মৈ দদৌ,
10 ௧0 இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,
১০ততস্তস্মৈ যীশুনাম্নে স্ৱর্গমর্ত্যপাতালস্থিতৈঃ সর্ৱ্ৱৈ র্জানুপাতঃ কর্ত্তৱ্যঃ,
11 ௧௧ பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
১১তাতস্থেশ্ৱরস্য মহিম্নে চ যীশুখ্রীষ্টঃ প্রভুরিতি জিহ্ৱাভিঃ স্ৱীকর্ত্তৱ্যং|
12 ௧௨ ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
১২অতো হে প্রিযতমাঃ, যুষ্মাভি র্যদ্ৱৎ সর্ৱ্ৱদা ক্রিযতে তদ্ৱৎ কেৱলে মমোপস্থিতিকালে তন্নহি কিন্ত্ৱিদানীম্ অনুপস্থিতেঽপি মযি বহুতরযত্নেনাজ্ঞাং গৃহীৎৱা ভযকম্পাভ্যাং স্ৱস্ৱপরিত্রাণং সাধ্যতাং|
13 ௧௩ ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.
১৩যত ঈশ্ৱর এৱ স্ৱকীযানুরোধাদ্ যুষ্মন্মধ্যে মনস্কামনাং কর্ম্মসিদ্ধিঞ্চ ৱিদধাতি|
14 ௧௪ நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
১৪যূযং কলহৱিৱাদর্ৱিজতম্ আচারং কুর্ৱ্ৱন্তোঽনিন্দনীযা অকুটিলা
15 ௧௫ கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,
১৫ঈশ্ৱরস্য নিষ্কলঙ্কাশ্চ সন্তানাইৱ ৱক্রভাৱানাং কুটিলাচারিণাঞ্চ লোকানাং মধ্যে তিষ্ঠত,
16 ௧௬ எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.
১৬যতস্তেষাং মধ্যে যূযং জীৱনৱাক্যং ধারযন্তো জগতো দীপকা ইৱ দীপ্যধ্ৱে| যুষ্মাভিস্তথা কৃতে মম যত্নঃ পরিশ্রমো ৱা ন নিষ্ফলো জাত ইত্যহং খ্রীষ্টস্য দিনে শ্লাঘাং কর্ত্তুং শক্ষ্যামি|
17 ௧௭ மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
১৭যুষ্মাকং ৱিশ্ৱাসার্থকায বলিদানায সেৱনায চ যদ্যপ্যহং নিৱেদিতৱ্যো ভৱেযং তথাপি তেনানন্দামি সর্ৱ্ৱেষাং যুষ্মাকম্ আনন্দস্যাংশী ভৱামি চ|
18 ௧௮ இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
১৮তদ্ৱদ্ যূযমপ্যানন্দত মদীযানন্দস্যাংশিনো ভৱত চ|
19 ௧௯ அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
১৯যুষ্মাকম্ অৱস্থাম্ অৱগত্যাহমপি যৎ সান্ত্ৱনাং প্রাপ্নুযাং তদর্থং তীমথিযং ৎৱরযা যুষ্মৎসমীপং প্রেষযিষ্যামীতি প্রভৌ প্রত্যাশাং কুর্ৱ্ৱে|
20 ௨0 ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை.
২০যঃ সত্যরূপেণ যুষ্মাকং হিতং চিন্তযতি তাদৃশ একভাৱস্তস্মাদন্যঃ কোঽপি মম সন্নিধৌ নাস্তি|
21 ௨௧ மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
২১যতোঽপরে সর্ৱ্ৱে যীশোঃ খ্রীষ্টস্য ৱিষযান্ ন চিন্তযন্ত আত্মৱিষযান্ চিন্তযন্তি|
22 ௨௨ தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
২২কিন্তু তস্য পরীক্ষিতৎৱং যুষ্মাভি র্জ্ঞাযতে যতঃ পুত্রো যাদৃক্ পিতুঃ সহকারী ভৱতি তথৈৱ সুসংৱাদস্য পরিচর্য্যাযাং স মম সহকারী জাতঃ|
23 ௨௩ ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
২৩অতএৱ মম ভাৱিদশাং জ্ঞাৎৱা তৎক্ষণাৎ তমেৱ প্রেষযিতুং প্রত্যাশাং কুর্ৱ্ৱে
24 ௨௪ அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
২৪স্ৱযম্ অহমপি তূর্ণং যুষ্মৎসমীপং গমিষ্যামীত্যাশাং প্রভুনা কুর্ৱ্ৱে|
25 ௨௫ மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.
২৫অপরং য ইপাফ্রদীতো মম ভ্রাতা কর্ম্মযুদ্ধাভ্যাং মম সহাযশ্চ যুষ্মাকং দূতো মদীযোপকারায প্রতিনিধিশ্চাস্তি যুষ্মৎসমীপে তস্য প্রেষণম্ আৱশ্যকম্ অমন্যে|
26 ௨௬ அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
২৬যতঃ স যুষ্মান্ সর্ৱ্ৱান্ অকাঙ্ক্ষত যুষ্মাভিস্তস্য রোগস্য ৱার্ত্তাশ্রাৱীতি বুদ্ধ্ৱা পর্য্যশোচচ্চ|
27 ௨௭ அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.
২৭স পীডযা মৃতকল্পোঽভৱদিতি সত্যং কিন্ত্ৱীশ্ৱরস্তং দযিতৱান্ মম চ দুঃখাৎ পরং পুনর্দুঃখং যন্ন ভৱেৎ তদর্থং কেৱলং তং ন দযিৎৱা মামপি দযিতৱান্|
28 ௨௮ ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.
২৮অতএৱ যূযং তং ৱিলোক্য যৎ পুনরানন্দেত মমাপি দুঃখস্য হ্রাসো যদ্ ভৱেৎ তদর্থম্ অহং ৎৱরযা তম্ অপ্রেষযং|
29 ௨௯ ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.
২৯অতো যূযং প্রভোঃ কৃতে সম্পূর্ণেনানন্দেন তং গৃহ্লীত তাদৃশান্ লোকাংশ্চাদরণীযান্ মন্যধ্ৱং|
30 ௩0 ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.
৩০যতো মম সেৱনে যুষ্মাকং ত্রুটিং পূরযিতুং স প্রাণান্ পণীকৃত্য খ্রীষ্টস্য কার্য্যার্থং মৃতপ্রাযেঽভৱৎ|