< பிலிப்பியர் 2 >

1 ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,
Er det da nogen trøst i Kristus, er det nogen kjærlighetens husvalelse, er det noget Åndens samfund, er det nogen medfølelse og barmhjertighet,
2 நீங்கள் ஒரே சிந்தையும் ஒரே அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாக ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
da gjør min glede fullkommen, så I har det samme sinn, idet I har den samme kjærlighet og med én sjel har det ene sinn,
3 ஒன்றையும் சுயநலத்தினாலோ, வீண்பெருமையினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் உங்களைவிட மேன்மையானவர்களாக நினைக்கவேண்டும்.
ikke gjør noget av trettesyke eller lyst til tom ære, men i ydmykhet akter hverandre høiere enn eder selv,
4 அவனவன் தன்னுடைய காரியங்களை மட்டுமல்ல, மற்றவர்களுடைய காரியங்களிலும் உதவிசெய்யவேண்டும்.
og ikke ser hver på sitt eget, men enhver også på andres beste.
5 கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;
La dette sinn være i eder, som og var i Kristus Jesus,
6 அவர் தேவனுடைய உருவமாக இருந்தும், தேவனுக்குச் சமமாக இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினைக்காமல்,
han som, da han var i Guds skikkelse, ikke aktet det for et rov å være Gud lik,
7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார்.
men av sig selv gav avkall på det og tok en tjeners skikkelse på sig, idet han kom i menneskers lignelse,
8 அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
og da han i sin ferd var funnet som et menneske, fornedret han sig selv, så han blev lydig inntil døden, ja korsets død.
9 ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
Derfor har og Gud høit ophøiet ham og gitt ham det navn som er over alt navn,
10 ௧0 இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும்,
så at i Jesu navn skal hvert kne bøie sig, deres som er i himmelen og på jorden og under jorden,
11 ௧௧ பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
Og hver tunge bekjenne at Jesus Kristus er Herre, til Gud Faders ære.
12 ௧௨ ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
Derfor, mine elskede, likesom I alltid har vært lydige, så arbeid, ikke bare som i mitt nærvær, men nu meget mere i mitt fravær, på eders frelse med frykt og beven;
13 ௧௩ ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.
for Gud er den som virker i eder både å ville og å virke til hans velbehag.
14 ௧௪ நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
Gjør alt uten knurr og tvil,
15 ௧௫ கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு,
forat I kan være ustraffelige og rene, Guds ulastelige barn midt iblandt en vanartet og vrang slekt, iblandt hvilken I viser eder som lys i verden,
16 ௧௬ எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள்.
idet I holder frem livets ord, til ros for mig på Kristi dag, at jeg ikke har løpet forgjeves eller arbeidet forgjeves.
17 ௧௭ மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
Men om jeg og blir ofret mens jeg gjør altertjeneste og bærer eders tro frem som offer, så gleder jeg mig, og gleder mig sammen med eder alle;
18 ௧௮ இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.
i like måte gled også I eder, og gled eder sammen med mig!
19 ௧௯ அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
Jeg har det håp i den Herre Jesus at jeg snart kan sende Timoteus til eder, forat også jeg kan bli ved godt mot, når jeg får vite hvorledes det er med eder.
20 ௨0 ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை.
For jeg har ingen likesinnet, som opriktig kan ha omsorg for eder;
21 ௨௧ மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
for de søker alle sitt eget, ikke det som hører Kristus Jesus til;
22 ௨௨ தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
men hans prøvede troskap kjenner I, at likesom en sønn tjener sin far, således har han tjent med mig for evangeliet.
23 ௨௩ ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
Ham håper jeg altså å sende straks jeg ser utgangen på min sak.
24 ௨௪ அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
Men jeg har den tillit i Herren at jeg og selv skal komme snart.
25 ௨௫ மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.
Og Epafroditus, min bror og medarbeider og medstrider og eders utsending og tjener til å råde bot på min trang, har jeg funnet det nødvendig å sende til eder,
26 ௨௬ அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
da han lengtes efter eder alle og var urolig i hu fordi I hadde hørt at han var blitt syk.
27 ௨௭ அவன் வியாதிப்பட்டு மரணத்திற்கு அருகில் இருந்தது உண்மைதான். ஆனாலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமட்டுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடி, எனக்கும் இரங்கினார்.
For han blev virkelig syk, døden nær; men Gud miskunnet sig over ham, dog ikke bare over ham, men også over mig forat jeg ikke skulde ha sorg på sorg.
28 ௨௮ ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.
Derfor sender jeg ham dess snarere, forat I kan glede eder ved å se ham igjen, og jeg være mere fri for sorg.
29 ௨௯ ஆனபடியால் நீங்கள் கர்த்தருக்குள் அதிகமான சந்தோஷத்தோடு அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனம்பண்ணுங்கள்.
Ta derfor imot ham i Herren med all glede, og hold slike i ære;
30 ௩0 ஏனென்றால், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்களுடைய குறைவை நிறைவாக்குவதற்கு, அவன் தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்திற்கு அருகில் இருந்தான்.
for det var for Kristi gjernings skyld han kom døden nær, da han våget sitt liv for å utfylle savnet av eder i tjenesten mot mig.

< பிலிப்பியர் 2 >