< பிலேமோன் 1 >
1 ௧ கிறிஸ்து இயேசுவுக்காக சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாக இருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாக இருக்கிற பிலேமோனுக்கும்,
ખ્રીષ્ટસ્ય યીશો ર્બન્દિદાસઃ પૌલસ્તીથિયનામા ભ્રાતા ચ પ્રિયં સહકારિણં ફિલીમોનં
2 ௨ பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்களுடைய உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவிற்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபை விசுவாசிகளுக்கும் எழுதுகிறதாவது:
પ્રિયામ્ આપ્પિયાં સહસેનામ્ આર્ખિપ્પં ફિલીમોનસ્ય ગૃહે સ્થિતાં સમિતિઞ્ચ પ્રતિ પત્રં લિખતઃ|
3 ௩ நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
અસ્માકં તાત ઈશ્વરઃ પ્રભુ ર્યીશુખ્રીષ્ટશ્ચ યુષ્માન્ પ્રતિ શાન્તિમ્ અનુગ્રહઞ્ચ ક્રિયાસ્તાં|
4 ௪ கர்த்தராகிய இயேசுவிடம் உள்ள உம்முடைய விசுவாசத்தையும், எல்லாப் பரிசுத்தவான்களிடமும் உள்ள உம்முடைய அன்பையும் நான் கேள்விப்பட்டு,
પ્રભું યીશું પ્રતિ સર્વ્વાન્ પવિત્રલોકાન્ પ્રતિ ચ તવ પ્રેમવિશ્વાસયો ર્વૃત્તાન્તં નિશમ્યાહં
5 ௫ என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்தி,
પ્રાર્થનાસમયે તવ નામોચ્ચારયન્ નિરન્તરં મમેશ્વરં ધન્યં વદામિ|
6 ௬ கிறிஸ்துவில் நமக்குள் உள்ள எல்லா நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் ஐக்கியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
અસ્માસુ યદ્યત્ સૌજન્યં વિદ્યતે તત્ સર્વ્વં ખ્રીષ્ટં યીશું યત્ પ્રતિ ભવતીતિ જ્ઞાનાય તવ વિશ્વાસમૂલિકા દાનશીલતા યત્ સફલા ભવેત્ તદહમ્ ઇચ્છામિ|
7 ௭ சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே உற்சாகமானதினால், உம்முடைய அன்பினாலே அதிக சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறேன்.
હે ભ્રાતઃ, ત્વયા પવિત્રલોકાનાં પ્રાણ આપ્યાયિતા અભવન્ એતસ્માત્ તવ પ્રેમ્નાસ્માકં મહાન્ આનન્દઃ સાન્ત્વના ચ જાતઃ|
8 ௮ ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால்,
ત્વયા યત્ કર્ત્તવ્યં તત્ ત્વામ્ આજ્ઞાપયિતું યદ્યપ્યહં ખ્રીષ્ટેનાતીવોત્સુકો ભવેયં તથાપિ વૃદ્ધ
9 ௯ நீர் செய்யவேண்டியதை உமக்குக் கட்டளையிடுவதற்குக் கிறிஸ்துவிற்குள் நான் துணிவுள்ளவனாக இருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினாலே மன்றாடுகிறேன்.
ઇદાનીં યીશુખ્રીષ્ટસ્ય બન્દિદાસશ્ચૈવમ્ભૂતો યઃ પૌલઃ સોઽહં ત્વાં વિનેતું વરં મન્યે|
10 ௧0 என்னவென்றால், சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கும்போது நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
અતઃ શૃઙ્ખલબદ્ધોઽહં યમજનયં તં મદીયતનયમ્ ઓનીષિમમ્ અધિ ત્વાં વિનયે|
11 ௧௧ முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான்.
સ પૂર્વ્વં તવાનુપકારક આસીત્ કિન્ત્વિદાનીં તવ મમ ચોપકારી ભવતિ|
12 ௧௨ அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
તમેવાહં તવ સમીપં પ્રેષયામિ, અતો મદીયપ્રાણસ્વરૂપઃ સ ત્વયાનુગૃહ્યતાં|
13 ௧௩ நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.
સુસંવાદસ્ય કૃતે શૃઙ્ખલબદ્ધોઽહં પરિચારકમિવ તં સ્વસન્નિધૌ વર્ત્તયિતુમ્ ઐચ્છં|
14 ௧௪ ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் இல்லை, மனப்பூர்வமாகச் செய்வதற்காக, நான் உம்முடைய சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்வதற்கு எனக்கு மனமில்லை.
કિન્તુ તવ સૌજન્યં યદ્ બલેન ન ભૂત્વા સ્વેચ્છાયાઃ ફલં ભવેત્ તદર્થં તવ સમ્મતિં વિના કિમપિ કર્ત્તવ્યં નામન્યે|
15 ௧௫ அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios )
કો જાનાતિ ક્ષણકાલાર્થં ત્વત્તસ્તસ્ય વિચ્છેદોઽભવદ્ એતસ્યાયમ્ અભિપ્રાયો યત્ ત્વમ્ અનન્તકાલાર્થં તં લપ્સ્યસે (aiōnios )
16 ௧௬ அவன் எனக்குப் பிரியமான சகோதரனென்றால், உமக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாக இருக்கவேண்டும்!
પુન ર્દાસમિવ લપ્સ્યસે તન્નહિ કિન્તુ દાસાત્ શ્રેષ્ઠં મમ પ્રિયં તવ ચ શારીરિકસમ્બન્ધાત્ પ્રભુસમ્બન્ધાચ્ચ તતોઽધિકં પ્રિયં ભ્રાતરમિવ|
17 ௧௭ ஆகவே, நீர் என்னை உம்முடைய உடன்ஊழியனாக ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
અતો હેતો ર્યદિ માં સહભાગિનં જાનાસિ તર્હિ મામિવ તમનુગૃહાણ|
18 ௧௮ அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
તેન યદિ તવ કિમપ્યપરાદ્ધં તુભ્યં કિમપિ ધાર્ય્યતે વા તર્હિ તત્ મમેતિ વિદિત્વા ગણય|
19 ௧௯ பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே.
અહં તત્ પરિશોત્સ્યામિ, એતત્ પૌલોઽહં સ્વહસ્તેન લિખામિ, યતસ્ત્વં સ્વપ્રાણાન્ અપિ મહ્યં ધારયસિ તદ્ વક્તું નેચ્છામિ|
20 ௨0 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும்.
ભો ભ્રાતઃ, પ્રભોઃ કૃતે મમ વાઞ્છાં પૂરય ખ્રીષ્ટસ્ય કૃતે મમ પ્રાણાન્ આપ્યાયય|
21 ௨௧ நான் சொல்லுகிறதைவிட அதிகமாகச் செய்வீர் என்று அறிந்து, இதற்கு நீர் சம்மதிப்பீர் என்கிற உறுதியோடு, உமக்கு எழுதியிருக்கிறேன்.
તવાજ્ઞાગ્રાહિત્વે વિશ્વસ્ય મયા એતત્ લિખ્યતે મયા યદુચ્યતે તતોઽધિકં ત્વયા કારિષ્યત ઇતિ જાનામિ|
22 ௨௨ மேலும், உங்களுடைய ஜெபங்களினாலே நான் உங்களிடம் அனுப்பப்படுவேன் என்று நம்பியிருக்கிறதினால், நான் தங்குவதற்காக ஒரு அறையை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
તત્કરણસમયે મદર્થમપિ વાસગૃહં ત્વયા સજ્જીક્રિયતાં યતો યુષ્માકં પ્રાર્થનાનાં ફલરૂપો વર ઇવાહં યુષ્મભ્યં દાયિષ્યે મમેતિ પ્રત્યાશા જાયતે|
23 ௨௩ கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
ખ્રીષ્ટસ્ય યીશાઃ કૃતે મયા સહ બન્દિરિપાફ્રા
24 ௨௪ என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
મમ સહકારિણો માર્ક આરિષ્ટાર્ખો દીમા લૂકશ્ચ ત્વાં નમસ્કારં વેદયન્તિ|
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடைய ஆவியோடு இருப்பதாக. ஆமென்.
અસ્માકં પ્રભો ર્યીશુખ્રીષ્ટસ્યાનુગ્રહો યુષ્માકમ્ આત્મના સહ ભૂયાત્| આમેન્|