< பிலேமோன் 1 >

1 கிறிஸ்து இயேசுவுக்காக சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாக இருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாக இருக்கிற பிலேமோனுக்கும்,
پولس، اسیر مسیح عیسی و تیموتاوس برادر، به فلیمون عزیز و همکار ما۱
2 பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்களுடைய உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவிற்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபை விசுவாசிகளுக்கும் எழுதுகிறதாவது:
و به اپفیه محبوبه و ارخپس همسپاه ما به کلیسایی که در خانه ات می‌باشد.۲
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
فیض و سلامتی از جانب پدر ما خدا وعیسی مسیح خداوند با شما باد.۳
4 கர்த்தராகிய இயேசுவிடம் உள்ள உம்முடைய விசுவாசத்தையும், எல்லாப் பரிசுத்தவான்களிடமும் உள்ள உம்முடைய அன்பையும் நான் கேள்விப்பட்டு,
خدای خود را شکر می‌کنم و پیوسته تو رادر دعاهای خود یاد می‌آورم۴
5 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்தி,
چونکه ذکرمحبت و ایمان تو را شنیده‌ام که به عیسی خداوندو به همه مقدسین داری،۵
6 கிறிஸ்துவில் நமக்குள் உள்ள எல்லா நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் ஐக்கியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.
تا شراکت ایمانت موثرشود در معرفت کامل هر نیکویی که در ما است برای مسیح عیسی.۶
7 சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே உற்சாகமானதினால், உம்முடைய அன்பினாலே அதிக சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறேன்.
زیرا که مرا خوشی کامل وتسلی رخ نمود از محبت تو از آنرو که دلهای مقدسین از تو‌ای برادر استراحت می‌پذیرند.۷
8 ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால்,
بدین جهت هرچند در مسیح کمال جسارت را دارم که به آنچه مناسب است تو را حکم دهم،۸
9 நீர் செய்யவேண்டியதை உமக்குக் கட்டளையிடுவதற்குக் கிறிஸ்துவிற்குள் நான் துணிவுள்ளவனாக இருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினாலே மன்றாடுகிறேன்.
لیکن برای محبت، سزاوارتر آن است که التماس نمایم، هرچند مردی چون پولس پیر والان اسیر مسیح عیسی نیز می‌باشم.۹
10 ௧0 என்னவென்றால், சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கும்போது நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன்.
پس تو را التماس می‌کنم درباره فرزند خود انیسیمس که در زنجیرهای خود او را تولید نمودم،۱۰
11 ௧௧ முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவனாக இருந்தான், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமாக இருக்கிறான்.
که سابق او برای تو بی‌فایده بود، لیکن الحال تو را و مرافایده مند می‌باشد؛۱۱
12 ௧௨ அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
که او را نزد تو پس می‌فرستم. پس تو او را بپذیر که جان من است.۱۲
13 ௧௩ நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.
و من می‌خواستم که او را نزد خود نگاه دارم تابه عوض تو مرا در زنجیرهای انجیل خدمت کند،۱۳
14 ௧௪ ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் இல்லை, மனப்பூர்வமாகச் செய்வதற்காக, நான் உம்முடைய சம்மதம் இல்லாமல் ஒன்றும் செய்வதற்கு எனக்கு மனமில்லை.
اما نخواستم کاری بدون رای تو کرده باشم تااحسان تو از راه اضطرار نباشد، بلکه از روی اختیار.۱۴
15 ௧௫ அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாக இருப்பதற்காகவும், இனிமேல் அவன் அடிமையானவனாக இல்லை, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும் இருப்பதற்காகவும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனான். (aiōnios g166)
زیرا که شاید بدین جهت ساعتی از توجدا شد تا او را تا به ابد دریابی. (aiōnios g166)۱۵
16 ௧௬ அவன் எனக்குப் பிரியமான சகோதரனென்றால், உமக்கு சரீரத்தின்படியும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாக இருக்கவேண்டும்!
لیکن بعد از این نه چون غلام بلکه فوق از غلام یعنی برادر عزیزخصوص به من اما چند مرتبه زیادتر به تو هم درجسم و هم در خداوند.۱۶
17 ௧௭ ஆகவே, நீர் என்னை உம்முடைய உடன்ஊழியனாக ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
پس هرگاه مرا رفیق می‌دانی، او را چون من قبول فرما.۱۷
18 ௧௮ அவன் உமக்கு ஏதாவது அநியாயம் செய்ததும், உம்மிடம் கடன்பட்டதுமிருந்தால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.
اما اگرضرری به تو رسانیده باشد یا طلبی از او داشته باشی، آن را بر من محسوب دار.۱۸
19 ௧௯ பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே.
من که پولس هستم، به‌دست خود می‌نویسم، خود ادا خواهم کرد، تا به تو نگویم که به‌جان خود نیز مدیون من هستی.۱۹
20 ௨0 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும்.
بلی‌ای برادر، تا من از تو در خداوندبرخوردار شوم. پس جان مرا در مسیح تازگی بده.۲۰
21 ௨௧ நான் சொல்லுகிறதைவிட அதிகமாகச் செய்வீர் என்று அறிந்து, இதற்கு நீர் சம்மதிப்பீர் என்கிற உறுதியோடு, உமக்கு எழுதியிருக்கிறேன்.
چون بر اطاعت تو اعتماد دارم، به تومی نویسم از آن جهت که می‌دانم بیشتر از آنچه می‌گویم هم خواهی کرد.۲۱
22 ௨௨ மேலும், உங்களுடைய ஜெபங்களினாலே நான் உங்களிடம் அனுப்பப்படுவேன் என்று நம்பியிருக்கிறதினால், நான் தங்குவதற்காக ஒரு அறையை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
معهذا منزلی نیز برای من حاضر کن، زیراکه امیدوارم از دعاهای شما به شما بخشیده شوم.۲۲
23 ௨௩ கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,
اپفراس که در مسیح عیسی همزندان من است و مرقس۲۳
24 ௨௪ என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
و ارسترخس و دیماس و لوقاهمکاران من تو را سلام می‌رسانند.۲۴
25 ௨௫ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடைய ஆவியோடு இருப்பதாக. ஆமென்.
فیض خداوند عیسی مسیح با روح شما باد. آمین.۲۵

< பிலேமோன் 1 >