< எண்ணாகமம் 9 >
1 ௧ அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
१इस्राएलियों के मिस्र देश से निकलने के दूसरे वर्ष के पहले महीने में यहोवा ने सीनै के जंगल में मूसा से कहा,
2 ௨ “குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
२“इस्राएली फसह नामक पर्व को उसके नियत समय पर मनाया करें।
3 ௩ இந்த மாதம் பதினான்காம்தேதி மாலை வேளையாகிய குறித்த காலத்தில் அதை அனுசரிக்கவேண்டும்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைகளின்படியேயும் அதை அனுசரிக்கவேண்டும் என்றார்.
३अर्थात् इसी महीने के चौदहवें दिन को साँझ के समय तुम लोग उसे सब विधियों और नियमों के अनुसार मानना।”
4 ௪ அப்படியே பஸ்காவை அனுசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டான்.
४तब मूसा ने इस्राएलियों से फसह मानने के लिये कह दिया।
5 ௫ அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமான வேளையில், சீனாய் வனாந்திரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
५और उन्होंने पहले महीने के चौदहवें दिन को साँझ के समय सीनै के जंगल में फसह को मनाया; और जो-जो आज्ञाएँ यहोवा ने मूसा को दी थीं उन्हीं के अनुसार इस्राएलियों ने किया।
6 ௬ அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை அனுசரிக்கத்தகாதவர்களாக இருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:
६परन्तु कुछ लोग एक मनुष्य के शव के द्वारा अशुद्ध होने के कारण उस दिन फसह को न मना सके; वे उसी दिन मूसा और हारून के समीप जाकर मूसा से कहने लगे,
7 ௭ “நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடி, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
७“हम लोग एक मनुष्य की लोथ के कारण अशुद्ध हैं; परन्तु हम क्यों रुके रहें, और इस्राएलियों के संग यहोवा का चढ़ावा नियत समय पर क्यों न चढ़ाएँ?”
8 ௮ மோசே அவர்களை நோக்கி: “பொறுங்கள்; யெகோவா உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
८मूसा ने उनसे कहा, “ठहरे रहो, मैं सुन लूँ कि यहोवा तुम्हारे विषय में क्या आज्ञा देता है।”
9 ௯ யெகோவா மோசேயை நோக்கி:
९यहोवा ने मूसा से कहा,
10 ௧0 “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலோ உங்கள் சந்ததியாரிலோ ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பயணமாகத் தூரமாக போயிருந்தாலும், யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
१०“इस्राएलियों से कह कि चाहे तुम लोग चाहे तुम्हारे वंश में से कोई भी किसी लोथ के कारण अशुद्ध हो, या दूर की यात्रा पर हो, तो भी वह यहोवा के लिये फसह को माने।
11 ௧௧ அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினான்காம்தேதி மாலைநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் சாப்பிட்டு
११वे उसे दूसरे महीने के चौदहवें दिन को साँझ के समय मनाएँ; और फसह के बलिपशु के माँस को अख़मीरी रोटी और कड़वे सागपात के साथ खाएँ।
12 ௧௨ அதிகாலைவரை அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய எல்லா முறைகளின்படியும் அதை அனுசரிக்கவேண்டும்.
१२और उसमें से कुछ भी सवेरे तक न रख छोड़े, और न उसकी कोई हड्डी तोड़े; वे फसह के पर्व को सारी विधियों के अनुसार मनाएँ।
13 ௧௩ ஒருவன் சுத்தமுள்ளவனுமாகப் பயணம் போகாதவனுமாக இருந்தும், பஸ்காவை அனுசரிக்காமல் போனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் யெகோவாவின் பலியைச் செலுத்தாதபடியால் தன்னுடைய மக்களில் இல்லாமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன்னுடைய பாவத்தைச் சுமப்பான்.
१३परन्तु जो मनुष्य शुद्ध हो और यात्रा पर न हो, परन्तु फसह के पर्व को न माने, वह मनुष्य अपने लोगों में से नाश किया जाए, उस मनुष्य को यहोवा का चढ़ावा नियत समय पर न ले आने के कारण अपने पाप का बोझ उठाना पड़ेगा।
14 ௧௪ ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறையின்படியும் அனுசரிக்கவேண்டும்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
१४यदि कोई परदेशी तुम्हारे साथ रहकर चाहे कि यहोवा के लिये फसह मनाएँ, तो वह उसी विधि और नियम के अनुसार उसको माने; देशी और परदेशी दोनों के लिये तुम्हारी एक ही विधि हो।”
15 ௧௫ வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது.
१५जिस दिन निवास जो, साक्षी का तम्बू भी कहलाता है, खड़ा किया गया, उस दिन बादल उस पर छा गया; और संध्या को वह निवास पर आग के समान दिखाई दिया और भोर तक दिखाई देता रहा।
16 ௧௬ இப்படி எப்போதும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
१६प्रतिदिन ऐसा ही हुआ करता था; अर्थात् दिन को बादल छाया रहता, और रात को आग दिखाई देती थी।
17 ௧௭ மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்வார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் மக்கள் முகாமிடுவார்கள்.
१७और जब जब वह बादल तम्बू पर से उठ जाता तब इस्राएली प्रस्थान करते थे; और जिस स्थान पर बादल ठहर जाता वहीं इस्राएली अपने डेरे खड़े करते थे।
18 ௧௮ யெகோவாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் மக்கள் புறப்படுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாட்களெல்லாம் அவர்கள் முகாமில் தங்கியிருப்பார்கள்.
१८यहोवा की आज्ञा से इस्राएली कूच करते थे, और यहोवा ही की आज्ञा से वे डेरे खड़े भी करते थे; और जितने दिन तक वह बादल निवास पर ठहरा रहता, उतने दिन तक वे डेरे डाले पड़े रहते थे।
19 ௧௯ மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் புறப்படாமல் யெகோவாவின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
१९जब बादल बहुत दिन निवास पर छाया रहता, तब भी इस्राएली यहोवा की आज्ञा मानते, और प्रस्थान नहीं करते थे।
20 ௨0 மேகம் சிலநாட்கள் மட்டும் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிட்டு, யெகோவாவுடைய கட்டளையின்படியே புறப்படுவார்கள்.
२०और कभी-कभी वह बादल थोड़े ही दिन तक निवास पर रहता, और तब भी वे यहोवा की आज्ञा से डेरे डाले पड़े रहते थे; और फिर यहोवा की आज्ञा ही से वे प्रस्थान करते थे।
21 ௨௧ மேகம் மாலைதுவங்கி அதிகாலைவரை இருந்து, அதிகாலையில் உயர எழும்பும்போது, உடனே புறப்படுவார்கள்; பகலிலோ இரவிலோ மேகம் எழும்பும்போது புறப்படுவார்கள்.
२१और कभी-कभी बादल केवल संध्या से भोर तक रहता; और जब वह भोर को उठ जाता था तब वे प्रस्थान करते थे, और यदि वह रात दिन बराबर रहता, तो जब बादल उठ जाता, तब ही वे प्रस्थान करते थे।
22 ௨௨ மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருடமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யாமல் முகாமிட்டிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ புறப்படுவார்கள்.
२२वह बादल चाहे दो दिन, चाहे एक महीना, चाहे वर्ष भर, जब तक निवास पर ठहरा रहता, तब तक इस्राएली अपने डेरों में रहते और प्रस्थान नहीं करते थे; परन्तु जब वह उठ जाता तब वे प्रस्थान करते थे।
23 ௨௩ யெகோவாவுடைய கட்டளையின்படியே முகாமிடுவார்கள்; யெகோவாவுடைய கட்டளையின்படியே பயணம் செய்வார்கள்; யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே யெகோவாவுடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.
२३यहोवा की आज्ञा से वे अपने डेरे खड़े करते, और यहोवा ही की आज्ञा से वे प्रस्थान करते थे; जो आज्ञा यहोवा मूसा के द्वारा देता था, उसको वे माना करते थे।