< எண்ணாகமம் 8 >

1 யெகோவா மோசேயை நோக்கி:
וַיְדַבֵּר יְהוָה אֶל־מֹשֶׁה לֵּאמֹֽר׃
2 “நீ ஆரோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
דַּבֵּר אֶֽל־אַהֲרֹן וְאָמַרְתָּ אֵלָיו בְּהַעֲלֹֽתְךָ אֶת־הַנֵּרֹת אֶל־מוּל פְּנֵי הַמְּנוֹרָה יָאִירוּ שִׁבְעַת הַנֵּרֽוֹת׃
3 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
וַיַּעַשׂ כֵּן אַהֲרֹן אֶל־מוּל פְּנֵי הַמְּנוֹרָה הֶעֱלָה נֵרֹתֶיהָ כּֽ͏ַאֲשֶׁר צִוָּה יְהוָה אֶת־מֹשֶֽׁה׃
4 இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் தங்கத்தால் அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
וְזֶה מַעֲשֵׂה הַמְּנֹרָה מִקְשָׁה זָהָב עַד־יְרֵכָהּ עַד־פִּרְחָהּ מִקְשָׁה הִוא כַּמַּרְאֶה אֲשֶׁר הֶרְאָה יְהוָה אֶת־מֹשֶׁה כֵּן עָשָׂה אֶת־הַמְּנֹרָֽה׃
5 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
וַיְדַבֵּר יְהוָה אֶל־מֹשֶׁה לֵּאמֹֽר׃
6 “நீ இஸ்ரவேல் மக்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிக்கவேண்டும்.
קַח אֶת־הַלְוִיִּם מִתּוֹךְ בְּנֵי יִשְׂרָאֵל וְטִהַרְתָּ אֹתָֽם׃
7 அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் தண்ணீரைத் தெளிக்கவேண்டும்; பின்பு அவர்கள் உடல் முழவதும் சவரம்செய்து, தங்களுடைய ஆடைகளைத் துவைத்து, தங்களைச் சுத்திகரிக்கவேண்டும்.
וְכֹֽה־תַעֲשֶׂה לָהֶם לְטֽ͏ַהֲרָם הַזֵּה עֲלֵיהֶם מֵי חַטָּאת וְהֶעֱבִירוּ תַעַר עַל־כָּל־בְּשָׂרָם וְכִבְּסוּ בִגְדֵיהֶם וְהִטֶּהָֽרוּ׃
8 அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லியமாவாகிய போஜனபலியையும் கொண்டுவரவேண்டும்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி.
וְלָֽקְחוּ פַּר בֶּן־בָּקָר וּמִנְחָתוֹ סֹלֶת בְּלוּלָה בַשָּׁמֶן וּפַר־שֵׁנִי בֶן־בָּקָר תִּקַּח לְחַטָּֽאת׃
9 லேவியர்களை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பு வரச்செய்து, இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்.
וְהִקְרַבְתָּ אֶת־הַלְוִיִּם לִפְנֵי אֹהֶל מוֹעֵד וְהִקְהַלְתָּ אֶֽת־כָּל־עֲדַת בְּנֵי יִשְׂרָאֵֽל׃
10 ௧0 நீ லேவியர்களைக் யெகோவாவுடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும்.
וְהִקְרַבְתָּ אֶת־הַלְוִיִּם לִפְנֵי יְהוָה וְסָמְכוּ בְנֵי־יִשְׂרָאֵל אֶת־יְדֵיהֶם עַל־הַלְוִיִּֽם׃
11 ௧௧ லேவியர்கள் யெகோவாவுக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் மக்களின் காணிக்கையாகக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாக நிறுத்தவேண்டும்.
וְהֵנִיף אַהֲרֹן אֶת־הַלְוִיִּם תְּנוּפָה לִפְנֵי יְהוָה מֵאֵת בְּנֵי יִשְׂרָאֵל וְהָיוּ לַעֲבֹד אֶת־עֲבֹדַת יְהוָֽה׃
12 ௧௨ அதன்பின்பு லேவியர்கள் தங்களுடைய கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்; பின்பு நீ லேவியர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, யெகோவாவுக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தி,
וְהַלְוִיִּם יִסְמְכוּ אֶת־יְדֵיהֶם עַל רֹאשׁ הַפָּרִים וַעֲשֵׂה אֶת־הָאֶחָד חַטָּאת וְאֶת־הָאֶחָד עֹלָה לַֽיהוָה לְכַפֵּר עַל־הַלְוִיִּֽם׃
13 ௧௩ லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய மகனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் யெகோவாவுக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
וְהַֽעֲמַדְתָּ אֶת־הַלְוִיִּם לִפְנֵי אַהֲרֹן וְלִפְנֵי בָנָיו וְהֵנַפְתָּ אֹתָם תְּנוּפָה לַֽיהוָֽה׃
14 ௧௪ “இப்படி நீ லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்.
וְהִבְדַּלְתָּ אֶת־הַלְוִיִּם מִתּוֹךְ בְּנֵי יִשְׂרָאֵל וְהָיוּ לִי הַלְוִיִּֽם׃
15 ௧௫ இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கவேண்டும்; அதன்பின்பு லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய நுழையவேண்டும்.
וְאַֽחֲרֵי־כֵן יָבֹאוּ הַלְוִיִּם לַעֲבֹד אֶת־אֹהֶל מוֹעֵד וְטִֽהַרְתָּ אֹתָם וְהֵנַפְתָּ אֹתָם תְּנוּפָֽה׃
16 ௧௬ இஸ்ரவேல் மக்களிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் மக்கள் எல்லாரிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற எல்லா முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
כִּי נְתֻנִים נְתֻנִים הֵמָּה לִי מִתּוֹךְ בְּנֵי יִשְׂרָאֵל תַּחַת פִּטְרַת כָּל־רֶחֶם בְּכוֹר כֹּל מִבְּנֵי יִשְׂרָאֵל לָקַחְתִּי אֹתָם לִֽי׃
17 ௧௭ இஸ்ரவேல் மக்களில் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் கொன்ற நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,
כִּי לִי כָל־בְּכוֹר בִּבְנֵי יִשְׂרָאֵל בָּאָדָם וּבַבְּהֵמָה בְּיוֹם הַכֹּתִי כָל־בְּכוֹר בְּאֶרֶץ מִצְרַיִם הִקְדַּשְׁתִּי אֹתָם לִֽי׃
18 ௧௮ பின்பு லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
וָאֶקַּח אֶת־הַלְוִיִּם תַּחַת כָּל־בְּכוֹר בִּבְנֵי יִשְׂרָאֵֽל׃
19 ௧௯ லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன்” என்றார்.
וָאֶתְּנָה אֶת־הַלְוִיִּם נְתֻנִים ׀ לְאַהֲרֹן וּלְבָנָיו מִתּוֹךְ בְּנֵי יִשְׂרָאֵל לַעֲבֹד אֶת־עֲבֹדַת בְּנֵֽי־יִשְׂרָאֵל בְּאֹהֶל מוֹעֵד וּלְכַפֵּר עַל־בְּנֵי יִשְׂרָאֵל וְלֹא יִהְיֶה בִּבְנֵי יִשְׂרָאֵל נֶגֶף בְּגֶשֶׁת בְּנֵֽי־יִשְׂרָאֵל אֶל־הַקֹּֽדֶשׁ׃
20 ௨0 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையார் யாவரும் யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களுக்குச் செய்தார்கள்.
וַיַּעַשׂ מֹשֶׁה וְאַהֲרֹן וְכָל־עֲדַת בְּנֵי־יִשְׂרָאֵל לַלְוִיִּם כְּכֹל אֲשֶׁר־צִוָּה יְהוָה אֶת־מֹשֶׁה לַלְוִיִּם כֵּן־עָשׂוּ לָהֶם בְּנֵי יִשְׂרָאֵֽל׃
21 ௨௧ லேவியர்கள் சுத்திகரிக்கப்பட்டு, தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
וַיִּֽתְחַטְּאוּ הַלְוִיִּם וַֽיְכַבְּסוּ בִּגְדֵיהֶם וַיָּנֶף אַהֲרֹן אֹתָם תְּנוּפָה לִפְנֵי יְהוָה וַיְכַפֵּר עֲלֵיהֶם אַהֲרֹן לְטַהֲרָֽם׃
22 ௨௨ அதற்குப்பின்பு லேவியர்கள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்களுடைய பணிவிடையைச் செய்யும்படி நுழைந்தார்கள்; யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
וְאַחֲרֵי־כֵן בָּאוּ הַלְוִיִּם לַעֲבֹד אֶת־עֲבֹֽדָתָם בְּאֹהֶל מוֹעֵד לִפְנֵי אַהֲרֹן וְלִפְנֵי בָנָיו כַּאֲשֶׁר צִוָּה יְהוָה אֶת־מֹשֶׁה עַל־הַלְוִיִּם כֵּן עָשׂוּ לָהֶֽם׃
23 ௨௩ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
וַיְדַבֵּר יְהוָה אֶל־מֹשֶׁה לֵּאמֹֽר׃
24 ௨௪ லேவியர்களுக்குரிய கட்டளை என்னவென்றால்: “இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் கூட்டத்திற்கு சேவிக்க வரவேண்டும்.
זֹאת אֲשֶׁר לַלְוִיִּם מִבֶּן חָמֵשׁ וְעֶשְׂרִים שָׁנָה וָמַעְלָה יָבוֹא לִצְבֹא צָבָא בַּעֲבֹדַת אֹהֶל מוֹעֵֽד׃
25 ௨௫ ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடை செய்யும் கூட்டத்தைவிட்டு,
וּמִבֶּן חֲמִשִּׁים שָׁנָה יָשׁוּב מִצְּבָא הָעֲבֹדָה וְלֹא יַעֲבֹד עֽוֹד׃
26 ௨௬ ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்களுடைய சகோதரர்களோடு ஊழியம் செய்வதைத் தவிர, வேறொரு வேலையும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டமிடவேண்டும்” என்றார்.
וְשֵׁרֵת אֶת־אֶחָיו בְּאֹהֶל מוֹעֵד לִשְׁמֹר מִשְׁמֶרֶת וַעֲבֹדָה לֹא יַעֲבֹד כָּכָה תַּעֲשֶׂה לַלְוִיִּם בְּמִשְׁמְרֹתָֽם׃

< எண்ணாகமம் 8 >