< எண்ணாகமம் 35 >
1 ௧ எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமவெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
I korero ano a Ihowa ki a Mohi i nga mania o Moapa, i te wahi o Horano, ki Heriko, i mea,
2 ௨ “இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தை லேவியர்கள் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
Whakahaua nga tama a Iharaira kia homai ki nga Riwaiti etahi pa o o ratou kainga ka riro nei i a ratou hei nohoanga; me hoatu ano ki nga Riwaiti nga wahi o waho o aua pa a tawhio noa.
3 ௩ அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும், அவர்களுடைய சொத்துக்களுக்கும், அவர்களுடைய எல்லா மிருக ஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும்.
A ko nga pa hei nohoanga mo ratou; ko nga wahi hoki o waho ake mo a ratou kararehe, mo o ratou taonga, mo a ratou kirehe katoa.
4 ௪ நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்துவங்கி, வெளியிலே சுற்றிலும் 1,500 அடிகள் தூரத்திற்கு எட்டவேண்டும்.
A, ko nga wahi o waho o nga pa, e hoatu e koutou ki nga Riwaiti, kia kotahi mano nga whatianga i te taiepa atu ano o te pa, a haere whakawaho a tawhio noa.
5 ௫ பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறம் துவங்கி, கிழக்கே 3,000 அடிகள், தெற்கே 3,000, அடிகள் வடக்கே 3,000 அடிகள் மேற்கே 3,000 அடிகள் அளந்துவிடவேண்டும்; இது அவர்களுடைய பட்டணங்களுக்கு வெளிநிலங்களாக இருப்பதாக.
Me ruri ano e koutou i waho o te pa, i te taha ki te rawhiti kia rua mano whatianga, i te taha ki te tonga kia rua mano whatianga, i te taha ki te hauauru kia rua mano whatianga, i te taha hoki ki te raki kia rua mano whatianga, a hei waenganui t e pa: ko nga wahi tenei mo ratou o waho i nga pa.
6 ௬ நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்திற்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலை செய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கவேண்டும்; அவைகளையல்லாமல், 42 பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
A kia ono nga pa whakaora i roto i nga pa e hoatu e koutou ki nga Riwaiti; me hoatu hei rerenga atu mo te kaiwhakamate: kia wha tekau ma rua hoki nga pa e tapiritia e koutou ki ena.
7 ௭ நீங்கள் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் 48 பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.
Ko nga pa katoa e hoatu e koutou ki nga Riwaiti, kia wha tekau ma waru: era, me nga wahi o waho ake.
8 ௮ நீங்கள் இஸ்ரவேல் மக்களின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படி தங்களுடைய பட்டணங்களில் லேவியர்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்.
A hei roto i te wahi tuturu o nga tama a Iharaira nga pa e hoatu e koutou; kia maha i roto i nga mea maha, kia ouou hoki i roto i nga mea ouou, kia rite ki tona kainga e riro i a ia ona pa e hoatu e tera, e tera, ki nga Riwaiti.
9 ௯ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
I korero ano a Ihowa ki a Mohi, i mea,
10 ௧0 “நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானை நதியைக் கடந்து, கானான் தேசத்தில் நுழையும்போது,
Korero ki nga tama a Iharaira, mea atu ki a ratou, E whiti koutou i Horano ki te whenua o Kanaana;
11 ௧௧ கை தவறி ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கும் அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கவேண்டும்.
Na ka whakarite i etahi pa mo koutou hei pa whakaora, hei rerenga atu mo te tangata whakamate, i whakamate nei i te tangata, otiia ehara i te mea ata whakaaro.
12 ௧௨ கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படும் முன்பு சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும்.
A ka waiho e koutou hei pa whakaora kei mate i te kaitakitaki; kei mate te tangata whakamate, kia tu ra ano ia ki te aroaro o te whakaminenga, kia whakawakia.
13 ௧௩ நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்திற்காக இருக்கவேண்டும்.
A kia ono nga pa e waiho hei whakaora, o nga pa e hoatu nei e koutou.
14 ௧௪ யோர்தானுக்கு நதிக்கு கிழக்கு புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாகும்.
Kia toru nga pa e hoatu e koutou i tenei taha o Horano, kia toru hoki nga pa e hoatu e koutou i te whenua o Kanaana; me waiho hei pa whakaora.
15 ௧௫ கை தவறி ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படி, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் மக்களுக்கும் உங்களின் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாக இருக்கவேண்டும்.
Hei whakaora enei pa e ono mo nga tama a Iharaira, mo te manene, mo te nohonoa i roto i a koutou: hei rerenga atu mo nga tangata i mate ai tetahi, otiia ehara i te mea ata whakaaro.
16 ௧௬ “ஒருவன் இரும்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
Otiia ki te patu ia i a ia ki te mea rino, a ka mate, he kaikohuru ia: kia mate rawa te kaikohuru.
17 ௧௭ ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Ki te patu ano hoki ia i a ia ki te kohatu i whiua e ia kia mate rawa ai, a ka mate, he kaikohuru ia: kia mate rawa te kaikohuru.
18 ௧௮ ஒருவன் தன்னுடைய கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாக இருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.
Ki te patu ranei ia i a ia ki te mea rakau a te ringa kia mate ai, a ka mate, he kaikohuru ia: kia mate rawa te kaikohuru.
19 ௧௯ பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டவுடன் அவனைக் கொன்று போடலாம்.
Ma te kaitakitaki toto ake ano e whakamate te kaikohuhu; e whakamate ia i a ia ina tutaki ki a ia.
20 ௨0 ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலோ, பதுங்கியிருந்து அவன் சாகும்படி அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலோ,
Ki te mea he ngakau kino tona, a ka wero ia i a ia; ki te whanga atu ranei ia, a ka epaina atu ia kia mate;
21 ௨௧ அவனைப் பகைத்து, தன்னுடைய கையினால் அடித்ததினாலோ, அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டவுடன் கொன்றுபோடலாம்.
Ki te mauahara ranei ia, a ka patu i a ia ki tona ringa e mate ai ia; kia mate rawa te kaipatu, he kaikohuru ia: e whakamatea te kaikohuru e te kaitakitaki toto, ina tutaki ki a ia.
22 ௨௨ “ஒருவன் பகையொன்றும் இல்லாமல் திடீரென ஒருவனைத் தள்ளி விழச்செய்ததாலோ, பதுங்காமல் எந்த ஒரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலோ,
Tena ia, mehemea he oho noa ake tana wero i a ia, ehara i te mea mauahara; ki te epaina ranei ia ki tetahi mea, a kihai i whakanga atu;
23 ௨௩ அவனுக்கு எதிரியாக இல்லாமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினைக்காமலும் இருக்கும்போது, ஒருவனைக் கொன்றுபோடும்படியான ஒரு கல்லினால் அவனைபார்க்காமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலோ, அவன் செத்துப்போனால்,
Ki te kohatu ranei, ki te mea e mate ai, a kihai i kitea atu, na kua u ki a ia, a ka mate, kahore ano hoki ona mauahara ki a ia, kihai ano hoki i rapu i te he mona;
24 ௨௪ அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,
Katahi ka whakarite te whakaminenga i ta te kaipatu, i ta te kaitakitaki toto; kia rite ki enei ritenga:
25 ௨௫ கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்திற்கு அவனைத் திரும்பப்போகும்படி செய்யவேண்டும்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அவன் அதிலே இருக்கவேண்டும்.
A ka whakaorangia e te whakaminenga te kaiwhakamate i roto i te ringa o te kaitakitaki toto, me whakahoki ano ia e te whakaminenga ki tona pa whakaora, i rere atu ai ia: a ka noho ia ki reira a mate noa te tino tohunga i whakawahia ki te hinu ta pu.
26 ௨௬ ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
Ki te puta kau atu te kawhakamate ki waho o te rohe o tona pa whakaora i rere atu nei ia;
27 ௨௭ பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்திற்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.
A ka pono ki a ia te kaitakitaki toto ki waho o te rohe o tona pa whakaora, a ka patua te kaiwhakamate e te kaitakitaki toto, e kore e whakairia he toto ki a ia:
28 ௨௮ கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையும்வரை அடைக்கலப்பட்டணத்தில் இருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன்னுடைய சுதந்தரமான தன்னுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பிப்போகலாம்.
Me noho hoki ia i roto i tona pa whakaora, kia mate ra ano te tino tohunga; a, muri iho i te matenga o te tino tohunga ka hoki te kaiwhakamate ki tona whenua tupu.
29 ௨௯ “இவைகள் உங்களுடைய வீடுகளில் எங்கும் உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாக இருப்பதாக.
Na hei tikanga whakawa enei ma koutou, i o koutou whakatupuranga, i o koutou nohoanga katoa.
30 ௩0 எவனாவது, ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படி அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யவேண்டும்; ஒரே சாட்சியைக்கொண்டுமட்டும் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யக்கூடாது.
Ki te patu tetahi i te tangata, ma te mangai o nga kaiwhakaatu e whakamatea ai te kaikohuru: kaua ano te kaiwhakaatu kotahi e whakatau he ki tetahi, e mate ai.
31 ௩௧ சாகிறதற்கேற்ற குற்றம் சுமந்த கொலைபாதகனுடைய உயிருக்காக நீங்கள் மீட்கும் பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.
Kaua ano hoki e tangohia he utu mo te kaikohuru kia ora, ki te mea he hara tona e mate ai: engari kia mate rawa ia.
32 ௩௨ தன்னுடைய அடைக்கலப்பட்டணத்திற்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது.
Kaua ano e tango utu mo te tangata i rere ki tona pa whakaora, kia hoki ai ia ki te whenua noho ai; kia mate ra ano te tohunga.
33 ௩௩ நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலே அன்றி, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்தப்பட்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
Kia kore ai e whakapokea e koutou te whenua kei reira nei koutou: ma nga toto hoki e poke ai te whenua: heoi ano hoki te mea hei pure i nga toto i whakahekea ki te whenua, ko nga toto o te kaiwhakaheke.
34 ௩௪ நீங்கள் குடியிருக்கும் என்னுடைய வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; யெகோவாவாகிய நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றார்.
Kaua e whakapokea te whenua e noho ai koutou, e noho ai ahau: no te mea e noho ana ahau, a Ihowa, i waenganui i nga tama a Iharaira.