< எண்ணாகமம் 33 >
1 ௧ மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் இராணுவங்களின்படி எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களுடைய பயணங்களின் விபரம்:
Ето пътуванията на израилтяните, които излязоха из Египетската земя по устроените си войнства под Моисеева и Ааронова ръка.
2 ௨ மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடி அவர்கள் புறப்பட்ட முறையாக அவர்களுடைய பயணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டு பயணித்த பயணங்களாவன:
Моисея по Господно повеление написа тръгванията им според пътуванията им; и ето пътуванията им според тръгванията им.
3 ௩ முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்கள் எல்லோரும் பார்க்க, இஸ்ரவேல் மக்கள் பலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
В първия месец, на петнадесетия ден от първия месец, отпътуваха от Рамесий; на сутринта на пасхата израилтяните излязоха с издигната ръка пред очите на всичките египтяни,
4 ௪ அப்பொழுது எகிப்தியர்கள் யெகோவா தங்களுக்குள்ளே அழித்த மூத்தபிள்ளைகளையெல்லாம் அடக்கம்செய்தார்கள்; அவர்களுடைய தெய்வங்களின் பெயரிலும் யெகோவா நீதிசெலுத்தினார்.
когато египтяните погребваха всичките си първородни, които Господ беше поразил помежду им. (И над боговете им Господ извърши съдби).
5 ௫ பின்பு இஸ்ரவேல் மக்கள் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே முகாமிட்டார்கள்.
И израилтяните, като отпътуваха от Рамесий, разположиха стан в Сикхот.
6 ௬ சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்திரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Сокхот, разположиха стан в Етам, който е в края на пустинята.
7 ௭ ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாக முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Етам върнаха се към Пиаирот, който е срещу Веелсефон, и разположиха стан срещу Мигдол.
8 ௮ ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்திரத்திற்குப் போய், ஏத்தாம் வனாந்திரத்திலே மூன்று நாட்கள் பயணம்செய்து, மாராவிலே முகாமிட்டார்கள்.
А когато отпътуваха от Пиаирот, преминаха през морето в пустинята, та пътуваха тридневен път през пустинята Етам и разположиха стан в Мера.
9 ௯ மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே முகாமிட்டார்கள்.
А като отпътуваха от Мера, дойдоха в Елим; а в Елим имаше дванадесет водни извори и седемдесет палмови дървета, и там разположиха стан.
10 ௧0 ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Елим, разположиха стан при Червеното море.
11 ௧௧ சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Червеното море, разположиха стан в пустинята Син.
12 ௧௨ சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от пустинята Син, разположиха стан в Дофка,
13 ௧௩ தொப்காவிலிருந்து புறப்பட்டுப் போய், ஆலூசிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Дофка, разположиха стан в Елус.
14 ௧௪ ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
Като отпътуваха от Елус, разположиха стар в Рафидим, гдето имаше вода да пият людете.
15 ௧௫ ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Рафидим, разположиха стан в Синайската пустиня.
16 ௧௬ சீனாய் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Синайската пустиня, разположиха стан в Киврот-атаава.
17 ௧௭ கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Киврот-атаава, разположиха стан в Асирот.
18 ௧௮ ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Асирот, разположиха стан в Ритма,
19 ௧௯ ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Ритма, разположиха стан в Римот-Фарес.
20 ௨0 ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Римот-Фарес, разположиха стан в Ливна.
21 ௨௧ லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Ливна, разположиха стан в Риса.
22 ௨௨ ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Риса, разположиха стан в Кеелата.
23 ௨௩ கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Кеелата, разположиха стан в хълма Сафер.
24 ௨௪ சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от хълма Сафер, разположиха стан в Харада.
25 ௨௫ ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Харада, разположиха стан в Макилот.
26 ௨௬ மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Макилот, разположиха стан в Тахат.
27 ௨௭ தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Тахат, разположиха стан в Тара.
28 ௨௮ தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Тара, разположиха стан в Митка.
29 ௨௯ மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Митка, разположиха стан в Асемона.
30 ௩0 அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Асемона, разположиха стан в Масирот.
31 ௩௧ மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Масирот, разположиха стан във Венеякан.
32 ௩௨ பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Венеякан, разположиха стан в Хоргадгад.
33 ௩௩ கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Хоргадгад, разположиха стан в Иотвата.
34 ௩௪ யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Иотвата, разположиха стан в Еврона.
35 ௩௫ எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Еврона, разположиха стан в Есион-гавер.
36 ௩௬ எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Есион-гавер, разположиха стан в пустинята Цин, която е Кадис.
37 ௩௭ காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
А като отпътуваха от Кадис, разположиха стан в планината Ор, при края на Едомската земя.
38 ௩௮ அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
И по Господно повеление свещеникът Аарон се изкачи на планината Ор, и умря там, в четиридесетата година от излизането на израилтяните от Египетската земя, в петия месец, на петия ден от месеца.
39 ௩௯ ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
Аарон беше на сто и двадесет и три години, когато умря на планината Ор.
40 ௪0 அந்த நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் மக்கள் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
И арадският цар, ханаанецът, който живееше на юг от Ханаанската земя, чу за идването на израилтяните.
41 ௪௧ ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
А те, като отпътуваха от планината Ор, разположиха стан в Салмона.
42 ௪௨ சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Салмона, разположиха стан в Финон.
43 ௪௩ பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Финон, разположиха стан в Овот.
44 ௪௪ ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரிமீன் மேடுகளிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Овот, разположиха стан в Е-аварим, на моавската граница.
45 ௪௫ அந்த மேடுகளை விட்டுப்பறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Иим, разположиха стан в Девон-гад.
46 ௪௬ தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Девон-гад, разположиха стан в Алмон-дивлатаим.
47 ௪௭ அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே முகாமிட்டார்கள்.
Като отпътуваха от Алмон-дивлатаим, разположиха стан на планината Аварим, срещу Нево.
48 ௪௮ அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.
А като отпътуваха от планината Аварим, разположиха стан на моавските полета при Иордан, срещу Ерихон.
49 ௪௯ யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் துவங்கி, ஆபேல் சித்தீம்மட்டும் முகாமிட்டிருந்தார்கள்.
При Иордан разположиха стан, от Ветиесимот до Авел-ситим, на моавските полета.
50 ௫0 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே யெகோவா மோசேயை நோக்கி:
Тогава Господ говори на Моисея на моавските полета при Иордан, срещу Ерихон, казвайки:
51 ௫௧ நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,
Говори на израилтяните, като им кажеш: Когато минете през Иордан в Ханаанската земя,
52 ௫௨ அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,
изгонете от пред себе си всичките жители на земята, изтребете всичките им изображения, унищожете всичките им леяни идоли, и съборете всичките им оброчища.
53 ௫௩ தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கவேண்டும்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.
И завладейте земята и заселете се в нея; защото на вас съм дал тая земя за наследство.
54 ௫௪ சீட்டுப்போட்டு, தேசத்தை உங்களுடைய குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக மக்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச மக்களுக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அந்த இடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.
И да разделите земята с жребие между семействата си за наследство на по-многобройните да дадете по-голямо наследство, а на по-малобройните да дадете по-малко наследство. На всекиго наследството да бъде там, гдето му падне жребието. Според бащините си племена да наследите.
55 ௫௫ நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமல் இருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்களுடைய கண்களில் முட்களும் உங்களுடைய விலாக்களிலே கூர்களுமாக இருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.
Но ако не изгоните от пред себе си жителите на земята, тогава ония от тях, които оставите, ще бъдат тръни в очите ви и бодли в ребрата ви и ще ви измъчват в земята, в която живеете.
56 ௫௬ அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல்” என்றார்.
А и при туй, онова, което мислеха да сторя на тях, ще го сторя на вас.