< எண்ணாகமம் 32 >

1 ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
Rubeniterne og Gaditerne havde meget Kvæg i store mængder. Da de nu saa Ja'zers Land og Gileads Land, fandt de, at Stedet egnede sig til Kvægavl.
2 ஆகையால் ரூபன் சந்ததியும் காத் சந்ததியும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
Derfor kom Gaditerne og Rubeniterne og sagde til Moses og Præsten Eleazar og Menighedens Øverste:
3 “யெகோவா இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறியடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
»Atarot, Dibon, Ja'zer, Nimra, Hesjbon, El'ale, Sebam, Nebo og Beon,
4 உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு.
det Land, HERREN har erobret for Israels Menighed, er et Land, der egner sig til Kvægavl, og dine Trælle ejer Hjorde.«
5 “உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகச்செய்வாராக; இந்த நாட்டை உமது அடியார்களுக்குக் சொந்த நிலமாக கொடுக்கவேண்டும்” என்றார்கள்.
Og de sagde: »Dersom vi har fundet Naade for dine Øjne, saa lad dine Trælle faa dette Land i Eje; før os ikke over Jordan!«
6 அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: “உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
Men Moses sagde til Gaditerne og Rubeniterne: »Skal eders Brødre drage i Krig, medens I bliver boende her?
7 யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடி, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்கிறது ஏன்?
Og hvorfor vil I betage Israeliterne Modet til at drage over til det Land, HERREN har givet dem?
8 அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்களுடைய தகப்பன்மார்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
Det gjorde eders Fædre, da jeg fra Kadesj-Barnea sendte dem hen for at se paa Landet;
9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அத்தேசத்தைப் பார்த்து வந்து, இஸ்ரவேல் மக்கள் யெகோவா தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடி அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகச்செய்தார்கள்.
da de var draget op til Esjkoldalen og havde set paa Landet, det og de Israeliterne Modet til at drage ind i det Land, HERREN havde givet dem.
10 ௧0 அதினால் யெகோவா அந்த நாளிலே கோபம் வந்தவராகி:
Men HERRENS Vrede blussede den Gang op, og han svor:
11 ௧௧ உத்தமமாக என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர,
De Mænd, der er draget op fra Ægypten, fra Tyveaarsalderen og opefter, skal ikke faa det Land at se, jeg tilsvor Abraham, Isak og Jakob, fordi de ikke viste mig fuld Lydighed,
12 ௧௨ எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாகப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
med Undtagelse af Kenizziten Kaleb, Jefunnes Søn, og Josua, Nuns Søn, thi de viste HERREN fuld Lydighed!
13 ௧௩ அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார்.
Og HERRENS Vrede blussede op mod Israel, og han lod dem vanke om i Ørkenen i fyrretyve Aar, indtil hele den Slægt var gaaet til Grunde, der gjorde, hvad der var ondt i HERRENS Øjne.
14 ௧௪ இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்களின் மேல் இருக்கும் யெகோவாவுடைய கோபத்தின் கடுமையை இன்னும் அதிகரிக்கச்செய்யும்படி, நீங்கள் உங்களுடைய தகப்பன்களின் இடத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாக எழும்பியிருக்கிறீர்கள்.
Og se, I træder nu i eders Fædres Fodspor, en Yngel af Syndere, for yderligere at øge HERRENS Vrede mod Israel!
15 ௧௫ நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்திரத்தில் இருக்கச்செய்வார்; இப்படி நீங்கள் இந்த மக்களையெல்லாம் அழியச்செய்வீர்கள்” என்றான்.
Naar I viger bort fra ham, vil han lade det blive endnu længer i Ørkenen, og I bringer Fordærvelse over hele dette Folk.«
16 ௧௬ அப்பொழுது அவர்கள் அவன் அருகில் வந்து: “எங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
Da traadte de frem for ham og sagde: »Vi vil kun bygge Kvægfolde til vore Hjorde her og Byer til vore Familier;
17 ௧௭ நாங்களோ இஸ்ரவேலர்களுடைய ராணுவத்தை அவர்கள் இடத்திலே கொண்டுபோய்ச் சேர்க்கும்வரையும், யுத்தத்திற்கு ஆயத்தமாக தீவிரத்தோடு அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்களுடைய பிள்ளைகள் இத்தேசத்து மக்களின் பொருட்டு பாதுகாப்பான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
men selv vil vi ruste os til Kamp og drage i Spidsen for Israeliterne, til vi har bragt dem hen til deres Sted; imens skal vore Familier blive i de befæstede Byer i Ly for Landets Indbyggere.
18 ௧௮ இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
Vi vil ikke vende tilbage til vore Huse, før enhver af Israeliterne har faaet sin Arvelod;
19 ௧௯ யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடு யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம்” என்றார்கள்.
thi vi vil ikke have Arvelod sammen med dem paa den anden Side af Jordan og længere borte, eftersom vi har faaet vor Arvelod her paa denne Side af Jordan paa Østsiden.«
20 ௨0 அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இந்த வார்த்தையின்படி செய்து, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி,
Da sagde Moses til dem: »Hvis I gør det, hvis I ruster eder til Kamp for HERRENS Aasyn,
21 ௨௧ யெகோவா தம்முடைய எதிரிகளைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடும்வரை, நீங்கள் எல்லோரும் அவருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக யோர்தானைக் கடந்து போவீர்களானால்,
hvis alle eders kamprustede Mænd overskrider Jordan for HERRENS Aasyn og bliver der, indtil han har jaget sine Fjender bort fra sit Aasyn,
22 ௨௨ அந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக கிடைத்தபின்பு, நீங்கள் திரும்பி வந்து, யெகோவாவுக்கு முன்பாகவும், இஸ்ரவேலர்களுக்கு முன்பாகவும், குற்றமில்லாமல் இருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்குச் சொந்தமாகும்.
og hvis I først vender tilbage, naar Landet er undertvunget for HERRENS Aasyn, skal I være sagesløse over for HERREN og Israel, og saa skal Landet her blive eders Ejendom for HERRENS Aasyn.
23 ௨௩ நீங்கள் இப்படிச் செய்யாமல்போனால், யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாக அறியுங்கள்.
Men hvis I ikke gør det, se, da synder I mod HERREN, og da skal I faa eders Synd at mærke, den skal nok finde eder.
24 ௨௪ உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்களுடைய ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்களுடைய வாய்மொழியின்படியே செய்யுங்கள்” என்றான்.
Byg eder Byer til eders Familier og Folde til eders Smaakvæg og gør, som I har sagt!«
25 ௨௫ அப்பொழுது காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மோசேயை நோக்கி: “எங்களுடைய ஆண்டவன் கட்டளையிட்டபடி உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
Da sagde Gaditerne og Rubeniterne til Moses: »Dine Trælle vil gøre, som min Herre byder;
26 ௨௬ எங்களுடைய பிள்ளைகளும் எங்களுடைய மனைவிகளும், எங்களுடைய ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
vore Børn, Kvinder, Hjorde og alt vort Kvæg skal blive der i Gileads Byer,
27 ௨௭ உமது ஊழியக்காரர்களாகிய நாங்களோ எங்களுடைய ஆண்டவன் சொன்னபடி, ஒவ்வொருவரும் யுத்தத்திற்கு ஆயத்தமாக, யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம்” என்றார்கள்.
men dine Trælle vil drage over og tage Del i Krigen, saa mange som er rustet til Kamp for HERRENS Aasyn, saaledes som min Herre har sagt.«
28 ௨௮ அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் மகனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் மக்களுடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
Saa gav Moses Præsten Eleazar og Josua, Nuns Søn, og Overhovederne for de israelitiske Stammers Fædrenehuse Befaling om dem,
29 ௨௯ “காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் அவரவர் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக உங்களோடுகூட யோர்தானைக் கடந்துபோனால், அந்த தேசம் உங்களுக்கு கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
og Moses sagde til dem: »Hvis Gaditerne og Rubeniterne, saa mange som er rustet til Kamp for HERRENS Aasyn, gaar over Jordan sammen med eder og Landet bliver eder underlagt, skal I give dem Gilead i Eje;
30 ௩0 உங்களோடுகூட யுத்தவீரர்களாகக் கடந்துபோகாமல் இருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையவேண்டும்” என்றான்.
men hvis de ikke gaar over sammen med eder, rustede til Kamp, skal de have Bopæl anvist blandt eder i Kana'ans Land.«
31 ௩௧ காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
Da svarede Gaditerne og Rubeniterne: »Hvad HERREN har talt til dine Trælle, vil vi gøre;
32 ௩௨ யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் சொந்தநிலம் எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் யெகோவாவுடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாகி கானான் தேசத்திற்குப் போவோம்” என்றார்கள்.
vi vil, rustede til Kamp for HERRENS Øjne, drage over til Kana'ans Land, men vor Arvelod paa den anden Side af Jordan bliver i vort Eje.«
33 ௩௩ அப்பொழுது மோசே காத் சந்ததிக்கும், ரூபன் சந்ததிக்கும், யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்ஜியத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்ஜியத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
Da gav Moses Gaditerne, Rubeniterne og Josefs Søn Manasses halve Stamme Amoriterkongen Sihons Kongerige og Kong Og af Basans Kongerige, Landet med Byerne og deres Omraade, Landets Byer rundt om.
34 ௩௪ பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
Saa byggede Gaditerne Dibon, Atarot, Aroer.
35 ௩௫ ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
Atarot-Sjofan, Ja'zer, Jogbeha,
36 ௩௬ பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் பாதுகாப்பான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
Bet-Nimra, Bet-Haran, befæstede Byer, og Kvægfolde;
37 ௩௭ ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
og Rubeniterne byggede Hesjbon, El'ale og Kirjatajim,
38 ௩௮ பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தார்கள்.
Nebo og Ba'al-Meon, hvis Navne ændredes, og Sibma; og de opkaldte Byerne, som de byggede, efter deres Navne.
39 ௩௯ மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததி கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டார்கள்.
Og Manasses Søn Makirs Sønner drog til Gilead og erobrede det og drev de der boende Amoriter bort;
40 ௪0 அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் மகனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
og Moses overdrog Gilead til Manasses Søn Makir, og han bosatte sig der;
41 ௪௧ மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பெயரிட்டான்.
men Manasses Søn Ja'ir drog hen og erobrede deres Teltbyer og kaldte dem Ja'irs Teltbyer.
42 ௪௨ நோபாக் போய், கேனாத்தையும், அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன்னுடைய பெயரின்படி நோபாக் என்று பெயரிட்டான்.
Og Noba drog hen og erobrede Kenat med tilhørende Smaabyer og kaldte det Noba efter sit eget Navn.

< எண்ணாகமம் 32 >